பிரதான செய்திகள்

ரணிலுக்கு வாழ்பிடிக்கும் ரவூப் ஹக்கீம் !அமைச்சு தேவையில்லை

அமைச்சு பதவி கிடைக்காவிட்டாலும் ரணில் தலைமையிலான இந்த அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் ஆதரவை வழங்குவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து ஊடகங்களுக்கு இன்று கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

அமைச்சு பதவியை எதிர்ப்பார்த்து நாங்கள் இந்த அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கவில்லை.

அமைச்சு பதவி கிடைக்காவிட்டாலும் ரணில் தலைமையிலான இந்த அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்குவோம்.

எவ்வாறாயினும், அமைச்சுப் பதவிகள் கேட்டு அரசாங்கத்திடம் எந்தவித கோரிக்கைகளையும் நாங்கள் முன்வைக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

மஹிந்தவுக்கும் ,சந்திரிக்காவுக்கும் அழைப்பு கொடுத்த மைத்திரி

wpengine

போர் காலத்தின் போது எனது தந்தை மிகவும் மனம் வருந்திய சம்பவம் புலிகளின் தலைவரது மகனின் மரணம்.!

Maash

உரிய பராமரிப்பின்றி காணப்படும் மன்னார் போக்குவரத்து பேருந்துகள்,

Maash