பிரதான செய்திகள்

ரணிலுக்கு நம்பிக்கையில்லா பிரேரணை! காதர் மஸ்தான் (பா.உ) கையொப்பம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றத்தில் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகரிடம் கையளித்தார்.

ஸ்ரீலங்க சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 4 பேரும் கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் 51 பேரும் இணைந்து குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையில் 55 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் டி.பி.ஏகநாயக்க, நிஷாந்த முதுஹெட்டிகே, எஸ்.புஞ்சிநிலமே மற்றும் காதர் மஸ்தான் ஆகிய 4 பேரும் கையெழுத்திட்டுள்ளனர்.

நம்பிக்கையில்லா பிரேரணையை பெற்றுக்கொண்ட சபாநாயகர், அறிக்கையில் உள்ள விடயங்கள் குறித்து ஆராய்ந்த பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படுமென தெரிவித்துள்ளார்.

Related posts

800க்கும் அதிகமான வீடுகள் முதற்கட்டமாக வழங்கப்படவுள்ளது!

wpengine

மன்னாரில் 24 மில்லியன் ரூபா கேரளா கஞ்சா

wpengine

மன்னார் சவேரியார் கல்லூரியின் 150 வருட பூர்த்தி கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

wpengine