பிரதான செய்திகள்

ரணிலுக்கு அதிக ஆதரவு உண்டு! பிரதமர் பதவியினை ஏற்கமுடியாது

தற்போதைய நிலையில் கட்சியில் ரணில் விக்ரமசிங்கவுக்கு அதிக ஆதரவு உள்ளமையே சஜித் பிரேமதாச உடனடியாக பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளாமைக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் பத்திரிகை ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

குறித்த செய்தியில்,

பிரதமர் பதவியை உடனடியாக ஏற்றுக்கொள்வதற்கு சஜித் விரும்பாமைக்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன.

கட்சியில் அதிக ஆதரவு ரணில் விக்ரமசிங்கவுக்கே தற்போது உள்ளமை, அதனைவிட நெருக்கடியான இந்த காலகட்டத்தில் பிரதமராகப் பதவியேற்பது தமக்கு பாதகமாக அமைந்துவிடும் என சஜித் கருதலாம்.

பிரதமாராகப் பதவியேற்று முக்கிய பிரச்சினைகளைத் தன்னால் சமாளிக்க முடியாமல் போனால் தனது எதிர்கால அரசியலை அது பாதிக்கும் எனவும் நீண்ட கால அடிப்படையில் அவர் சிந்திக்கின்றார் எனவும் சஜித் சிந்திக்கின்றார்.

அத்துடன் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க எப்படியும் களமிறங்குவார், அப்போது பிரதமர் பதவிக்குத் தன்னுடைய பெயரே பரிந்துரைக்கப்படும் என்ற எண்ணத்தினாலும் சஜித் பிரதமர் பதவியை மறுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கடன் அட்டைக்கான வட்டிவீதம் அதிகரிப்பு! மத்திய வங்கி கட்டுப்படுத்தவில்லை

wpengine

ஜனாதிபதியின் வருகையின் பின் முக்கிய அமைச்சர் பதவி விலகவுள்ளார்.

wpengine

வவுனியா கோவில்குளம் சிவன் கும்பாபிஷேக! அரசாங்க தலைமையில் கூட்டம்.

wpengine