பிரதான செய்திகள்

ரணிலிடம் இருந்து கைப்பற்றிய மஹிந்த அணி

கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி அதிக ஆசனங்களை கைப்பற்றிய காலி மற்றும் நீர்கொழும்பு மாநகர சபைகளின் முதல்வர் பதவிகளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கைப்பற்றியுள்ளது.

பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் முதல்வர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

காலி மாநகர சபையின் முதல்வராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்த பிரியந்த கொடகம சபாபந்து அதிகளவான உறுப்பினர்களின் வாக்குகளை பெற்று தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

முதல்வரை தெரிவு செய்ய நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில் சபாபந்து 20 உறுப்பினர்களின் வாக்குகளை பெற்றுள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் மாநகர சபையின் முதல்வர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட ஜிலித் நிஷாந்தவிற்கு 11 உறுப்பினர்களின் வாக்குகள் மாத்திரமே கிடைத்துள்ளன.

மக்கள் விடுதலை முன்னணியின் மூன்று உறுப்பினர்கள் மற்றும் சுயேட்சை உறுப்பினர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

Related posts

நாளை பணி பகிஷ்கரிப்பு இல்லை தனியார் பஸ்

wpengine

தீயாக பரவி வரும் ஐஸ்கிரீம் மெஜிக் (விடியோ)

wpengine

பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீனின் அவசர வேண்டுகோள்.!

wpengine