பிரதான செய்திகள்

“ரஞ்சன் ராமநாயக்கவுக்கு விரைவில் விடுதலை கிடைக்கும்-சஜித் பிரேமதாச

“ரஞ்சன் ராமநாயக்கவுக்கு விரைவில் விடுதலை கிடைக்கும் என நானும் அனைத்து அரசியல்வாதிகளும் மற்றும் சகல இலங்கையர்களும் எதிர்பார்த்துள்ளோம்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை இன்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

“நீண்ட நாட்கள் செல்வதற்கு முன் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கும் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு விடுதலை கிடைக்கும் என நான் எதிர்பார்த்துள்ளேன். அந்நாள் வரும் வரை காத்திருக்கின்றேன்.

ரஞ்சன் ராமநாயக்க மனிதாபிமான மிக்க அரசியல்வாதிவாதி, மக்கள் சார் கலைஞர், மக்கள் செல்வாக்குள்ள பிரபலம்.

நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் அவர் மகத்தான பணிகளை ஆற்றியுள்ளார். நல்ல பண்புகளைக் கொண்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவை இன்று நான் நேரில் சந்தித்து நீண்ட நேரம் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டேன்.

அவர் சுதந்திர குடிமகனாக சமூகத்துக்குத் திரும்பி, உறுதியுடன் சமூக நீதிக்காகப் பாடுபடுவதைப் பார்ப்பதை எனது ஒரே நோக்கம்” என்றார்.   

Related posts

கிழக்கு தமிழ் பாடசாலைகளை தரமுயர்த்தும் கிழக்கு ஆளுநர்

wpengine

யாழ்-கிளிநொச்சி மாவட்டங்களுக்கு விடுமுறை-ஆளுநர்

wpengine

மன்னாரில் காணமல்போன மனநோயாளி! பொலிஸ் முறைப்பாடு

wpengine