பிரதான செய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீ விபத்து!

யாழ்ப்பாணம் – அச்சுவேலி, வல்லை இந்து மயான களப்பு பகுதியில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.

அச்சுவேலி பகுதியில் நேற்று (27) இடம்பெற்ற மரண சடங்கின் இறுதி ஊர்வலத்தின் போது இளைஞர்களினால் வீசப்பட்ட பட்டாசு வெடி புற்தரவையில் விழுந்து தீப்பற்றிக் கொண்டது.

இதனால் குறித்த பகுதியின் பெரும்பாலான பற்றைக் காடுகள் தீயில் கருகி நாசமாகின.

இது தொடர்பில் பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய பிரதேச சபை பணியாளர்கள் மூலம் தீப்பரவல் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.

Related posts

சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கான ஊடக பயிற்சி நெறி! தமிழில் தேசிய கீதம்

wpengine

அரச அதிகாரிகள் மக்கள் நலன்சார்ந்து செயற்பட வேண்டும்- இரா.சாணக்கியன்

wpengine

மன்னார் ஆடை தொழிற்சாலையில் கடமையாற்றும் பெண்கள் பணிப்பகிஸ்கரிப்பு

wpengine