பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் கொவிட் கொத்தணி!

யாழ். பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 11 பொலிஸாருக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதென, வடமாகாண சுகாதார பணிப்பாளர் ஏ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 12ஆம் திகதியிலிருந்து 20ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 9 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் பின்னரே, 11 பொலிஸாருக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, இதுவரை 20 பொலிஸாருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மரங்களை காணவில்லை முன்னால் அமைச்சர் பொலிஸ் முறைப்பாடு

wpengine

ஹர்த்தாலுக்கு மன்னார் நகரில் ஆதரவு

wpengine

விக்னேஸ்வரன் ஒரு இனவாதி மேல் மாகாண முதலமைச்சர் குற்றசாட்டு

wpengine