பிரதான செய்திகள்

யாழ்ப்பாண காதலன் கொழும்பு காதலிக்கு எழுதிய கடிதம்

தன்னை காதலித்து பிரிந்து சென்ற கொழும்பு காதலிக்கு யாழ்ப்பாண இளைஞன் எழுதிய காதல் கடிதம் இப்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது அதை உங்களுக்கு தருகிறோம்.

Dear பிரியா

பிரியா உன்னை உனக்கு ரொம்ப பிடிக்கும் உன்னோட வாழ்க்கை முழுக்க சந்தோசமா வாழனும் எண்டு நான் ஆசைப்பட்டன். என்ர வாழக்கையில முதல் காதலும் முடிவுக்காதலும் நீதான்-நீமட்டும்தான். உன்னோட பழகினது உன்னோட கதைச்சது உன்னோட சண்டைபோட்டது எல்லாம் என்ர வாழ்க்கையில மறக்கமுடியாத நினைவுகள் பிரியா.

என்ர வாழ்நாளில நான் சந்தோசமா இருந்தது உன்னோட இருக்கும்போது மட்டும்தான்.முதல் எல்லாம் ஒரே போண் பண்ணி சாப்பிட்டியா என்செய்ற எண்டு ஒரே போண் எடுத்துக்கொண்டு இருப்பாய் இரண்டுபேரும் இரவு முழுக்க கதைப்பம் அப்டி என்னதான் கதைச்சம் எண்டு தெரியாது ஆனா நித்திiரை கொள்ளாம கதைச்சுக் கொண்டு இருப்பம். ஆனா இப்ப உன்னோட கதைச்சே பல மாசங்கள் ஆகிற்று.

என்ர போணுக்கு போன் வந்தா ஓடிவந்து பாப்பன் அது நீயா இருக்குமா எண்டு ஆனா ஒவ்வொரு முறையும் எனக்கு ஏமாற்றம் மட்டுதான் . ஐந்துவருசமா இரண்டு பேரும் கதைச்சம் இப்ப ஐந்து நிமிசம் என்ர ஞாபகம் உனக்கு வராதா எண்ட ஒரு நப்பாசை.

ஒவ்வொருதற்ற வாழ்க்கையில மறக்கமுடியாத எதோ ஒரு விடயம் இருக்கும் என்ர வாழ்க்கையில அது நீதான்.

உன்னோட பழகேக்க உன்ர அன்பு எனக்கு புதுசா தெரிஞ்சிது அதோட உன்ர நல்ல குணம் மற்றாக்கள் மேல இருக்கிற மரியாதை எல்லோரோடையும் சகஜமா பழகிற குணம் எல்லாம் எனக்கு பிடிச்சிது. அது உன்மேல இன்னும் அன்பையும் பாசத்தையும் அதிகமாக்கிச்சு.

என்மேல நிறையபாசமும் அன்பும் நீ வைச்சிருந்த அது எனக்கு தெரியும் ஆன இப்ப அது எல்லாம் இல்லாம போயிற்று. நீ என்ன விட்டிட்டு போவாய் எண்டு நான் கனவில கூட நினைச்சுப்பாக்கேல்ல ஆன நிஜத்தில அது நடக்குது.

நடந்தது எல்லாம் மறந்திரு நீ உன்ர வாழ்க்கையை பார் நான் என்ர வாழக்கையை பார்க்கிறன் எண்டு சொல்றாய். எப்படி மறக்கிறது மறக்கிற மாதிரி நான் உன்னோட பொய்யா பழகேல்ல என்ர வாழக்கையில நடக்கிற ஒவ்வவொரு விசயமும் உன்னை ஞாபகப்படுத்திக்கொண்டு இருக்கும். என்னால உன்னை மறக்கமுடியாது.

எனக்கு கவலை அல்லது கஸ்டமா இருந்தா உன்ர போட்டோவை பாப்பன் எல்லா பிரச்சினையும் அப்டியே பறந்துபோயிரும்.

எனக்கு உன்ர நிலமை தெரியும் பிரியா

உன்னோட சந்தோசமா வழனும் உனக்கு பிடிச்சத செய்யணும் உனக்கு பிடிச்சமாரி நான் நடந்து கொள்ளனும் உன்ர அம்மா அப்பாவ என்ர அம்மா அப்பா மாதிரி பாத்துக்கொள்ளனும் நீ ஆசைப்பட்டது எல்லாம் செய்யணும். உன்னை யாரிட்டையும் விட்டுக்கொடுக்காம பேசனும் நாங்க வாழ்க்கையில் ஒண்டு சேர்ந்தா பிறகு எப்டி எப்டி நடந்து கொள்ளனும் எப்டி உன்ன சந்தோசமா வைச்சிருக்கனும் எப்டி உன்னை சப்ரைஸ் பண்ணணும் எண்டு ஒவ்வொரு விசயத்தையும் நான் பிளான் பண்ணி வைச்சிருந்தன்.

இந்த ஐந்து வருசத்தில உன்னோட சின்ன சண்டை பிடிச்சாலும் உன்னோட நான் கதைக்காம இருந்ததில்ல.  எப்பவுமே உன்ர ஞாபகமாத்தான் இருக்கு அதை எப்டி உனக்கு சொல்லி புரியவைக்கிறது எண்டு தெரியேல்ல

உன்னோட கதைக்கனும் நீ என்ன செய்யிறாய் எண்டு கேக்கனும் எண்டு உன்மேல இருக்கிற பாசத்திலதான் நான் உனக்கு போன் பன்றனான் ஆனா நீ எதோ எல்லாம் சொல்லி என்ன பேசுவாய். நீ என்னை பேசினாலும் உன்ர குரலக்கேட்ட சந்தோசத்தில நீ பேசினதெல்லம் மறந்து போயிரும்.

உன்னை பிடிக்கும் உன்னை மட்டுதான் பிடிக்கும் எண்டெல்லாம் சொல்லுவாய் இப்ப என்னோட கதைக்க கூட உனக்கு பிடிக்குதில்லை. நான் உன்னை ரோச்சர் பண்ணி கதைக்கிறன் எண்டு சொல்றாய் என்னை போர் அடிச்சிற்று எண்டு சொல்றாய். பிரியா உன்னை ரோச்சர் பண்ணி நான் கதைக்கமாட்டன்.

என்னை இப்ப உனக்கு பிடிக்கேல்ல பரவாயில்லை. ஆனா உன்னை ரோச்சர் பண்ணி உன்னை கஸ்டப்படுத்தி நான் கதைக்கமாட்டன்.

உன்ர சந்தோசம் தான் எனக்கு முக்கியம் நீ எப்பவும் சந்தோசமா சிரிச்சுக் கொண்டு இருக்கனும் அதுக்காக நான் என்ன வேண்டும் எண்டாலும் செய்வன் ஆனா உன்னை மறக்க மட்டும் சொல்லாத

வாழ்கையில உன்னோட இருந்த காலம் மட்டுதான் உன்மையான அன்பு பாசம் அக்கறை சந்தோசம் எல்லாம் இருந்திச்சு இப்ப என்ர வாழக்கையில அது எல்லாம் இல்லை.

பிரியா உன்னை நிறைய கஸ்டப்படுத்திற்றன் என. நீ எப்பவும் சந்தோசமா happyயா இருக்கனும்

miss you பப்பு…….

Related posts

மன்னாரில் தீ அணைப்பு நடவடிக்கை ஆரம்பம்

wpengine

போலி அனுமதிப்பத்திரம்! உதய கம்மன்பில கைது

wpengine

“வட்ஸ் அப்பில்” வியாபாரம்

wpengine