செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தியாழ்ப்பாணம்

யாழ். பதில் பொலிஸ் பொறுப்பதிகாரியின் மகன் இலஞ்சம் பெற்றதாக பொலிஸாரிடம் முறைப்பாடு..!

யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலையத்தின் பதில் பொலிஸ் பொறுப்பதிகாரியின் மகன் 20 ஆயிரம் ரூபா இலஞ்சம் பெற்றதாக யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

வட்டுக்கோட்டை – மூளாய் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் (03.03.2025) மதுபானம் பாவித்து விட்டு வாகனத்தை செலுத்திய வேளை யாழ்ப்பாணம் நகர் பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அந்த வழக்கினை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லாமல் தடுப்பதாக கூறி யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியின் மகன் 20 ஆயிரம் ரூபா இலஞ்சமாக பெற்றுள்ளார். இருப்பினும் அந்த வழக்கானது நீதிமன்றுக்கு கொண்டுசென்ற நிலையில் சாரதிக்கான தண்டமாக 25 ஆயிரம் ரூபா அறவிடப்பட்டது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட நபர் நேற்று யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். இலஞ்சம் பெற்ற குறித்த நபர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

வங்குரோத்து வாதிகள் என் மீது பொய் பிரச்சாரங்களை மேற்கொள்ளுகின்றார்கள்

wpengine

தடை செய்து! வெங்காயத்திற்கு ஊக்கமளிக்கும் அமைச்சர் றிஷாட்

wpengine

வசந்தம் தொலைக்காட்சி ஊடகவியலாளர் இர்பான் வைத்தியசாலையில்

wpengine