செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தியாழ்ப்பாணம்

யாழ். நெடுந்தீவில் முச்சக்கர வண்டி விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழப்பு.

யாழ்ப்பாணம், நெடுந்தீவு பிரதான வீதி இலங்கை வங்கி கிளை அருகே, நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நெடுந்தீவு 11 ஆம் வட்டாரத்தினைச் சேர்ந்த 59 வயதுடைய ஒருவரே உயிரிழந்தவர் ஆவார்.

வேகமாக வந்த முச்சக்கரவண்டி வீதியினை கடக்க முற்பட்டவரை மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதேவேளை முச்சக்கரவண்டி சாரதி நெடுந்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில் நெடுந்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

சந்தேகத்தின் பேரில் வவுனியாவில் மண்ணை தோண்டும் விஷேட பிரிவு

wpengine

வடக்கில் போலி சான்றிதழ்! 2 அதிபர்கள் 18 ஆசிரியர்கள் நீக்கம்.

wpengine

அங்கம் வகிக்க வேண்டுமா? இல்லையா?

wpengine