உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

யாழ் தேசிய மீலாத் விழா விளையாட்டுப் போட்டி ஏற்பாடுகள் பூர்த்தி

(பாறுக் ஷிஹான்)
யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள தேசிய மீலாத் விழாவை முன்னிட்டு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் வடக்கில் இடம்பெறவுள்ளன.

 அவற்றின் விபரங்களாவன.

கழகங்களுக்கிடையிலான உதைப்பந்தாட்டப் போட்டி

 யாழ் மாவட்டத்தின் பதிவு செய்யப் பட்ட பல்வேறு அணிகளுடன் கிளிநொச்சி (நாச்சிக்குடா) அணி போன்றவை உதைப் பந்தாட்டப் போட்டியில் பங்குபற்ற ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டுள்ளன. புத்தளத்திலுள்ள யுனைடட் அணிக்கு நாம் அழைப்பு விடுத்துள்ளோம். 11 பேர் கொண்ட அணிகள் 25:5;25  நிமிடங்கள் கொண்ட நொக் அவுட் முறையிலான போட்டியில் கலந்து கொள்ளும்.

யாழ் முஸ்லிம் அணிகளுக்கிடையிலான போட்டி
மேலும் யாழ் முஸ்லிம்களுக்கிடையிலான உதைப் பந்தாட்டச் சுற்றுப் போட்டியொன்றும் நடத்தப் படவுள்ளது. 11 பேர் கொண்ட அணிகள் 20:5;20  நிமிடங்கள் கொண்ட நொக் அவுட் முறையிலான போட்டியில் கலந்து கொள்ளும்.

கிறிகட் சுற்றுப் போட்டி
யாழ் கிறிக்கட் கழகங்களுக்கிடையிலான கிறிக்கட் சுற்றும் போட்டியொன்றும் நடத்தப் படவுள்ளது. இப்போட்டியில் யாழில் உள்ள் தமிழ் பேசும் மக்களின் கழகங்களும் புத்தளம் மற்றும் நீர் கொழும்பு கழகங்களும் கலந்து கொள்ளவுள்ளன. 11 பேர் கொண்ட அணிகள் 5 ஓவர் கொண்ட நொக் அவுட் முறையிலான போட்டியில் கலந்து கொள்ளும்.

மரதன் ஓட்டப் போட்டி
யாழ் மாவட்டத்தின் தமிழ் பேசும் வீரர்கள் கலந்து கொள்ளவுள்ள இம்மரதன் போட்டி  யாழ்ப்பாண வீதிகளினூடாக  ஓடி இறுதியில் ஜின்னா மைதானத்தைச் சென்றடையும்.

சைக்கிளோட்டப் போட்டி
யாழ் மாவட்டத்தின் முன்னனி சைக்கிளோட்ட வீரர்களுடன் புது முக வீரர்களும் இபோட்டியில் கலந்து கொள்வார்கள் என எதிபார்க்கப் படுகின்றது.

முஸ்லிம் கழகங்களுக்கிடையிலான உதைப் பந்தாட்டப் போட்டியும்  தமிழ் பேசும் மக்களுக்கிடையிலான கிறிகட் போட்டியும்  2017 டிசம்பர் 9 மற்றும் 10 ஆம் திகதிகளிலும் ஏனைய போட்டிகள் டிசம்பர் 16 மற்றும் 17 ஆம் திகதிகளிலும் நடத்த திட்டமிடப் பட்டுள்ளது.

கிறிக்கட் மற்றும் யாழ் முஸ்லிம் அணிகளுக்கிடையிலான் உதைப் பந்தாட்டப் போட்டிகளில் ஏனைய மாவட்ட அணிகளும் கலந்து கொள்ளமுடியும்.

எனவே  சகல போட்டிகள் சம்பந்தமாகவும்    இஸ்ஸதில் லாபி நிராஸ் – 0777067365 எம்.ஐ. எம். ரியாஸ்  0775186785 ஏ.கே.எம். அனஸ்  0729697513 எஸ். எச்.எம்.நஸீர்   0774331822 ஏ.ஆசிக்  0772626226 எம்.ஐ. இர்சாத் 0777192883  பி.எஸ்.எம். சரபுல் அனாம் 0776590632 எம்.ஏ.சி.எம். அமீன் 0773187222 ரிபாஸ் நசீர் 0713533653    ஐ. அம்ஜத் 0778881202 (கிறிக்கட்) பின்வருவோரைத்  தொடர்பு கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.

Related posts

2054 இல் அனைத்து மதங்களும் அழிந்துவிடும் : பௌத்த தர்மமே கோலோச்சும் – அமைச்சர் ராஜபக்ஷ

wpengine

மீண்டும் பாவனைக்கு வந்த சமூகவலைத்தளம்

wpengine

அமைச்சு பதவியில் மாற்றம்

wpengine