பிரதான செய்திகள்

யாழிற்கு திடீர் விஜயம் மேற்கொண்ட புத்தசாசன அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க!

புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க யாழ்ப்பாணத்திற்கு தீடீர் விஜயமொன்றை மேற்கொண்டார்.

கடற்படையின் விசேட படகு மூலம் நெடுந்தீவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக அமைச்சர் வருகை தந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தின்போது நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் நேற்று இடம்பெற்ற பாடசாலை நூலக அபிவிருத்தி மற்றும் மொழி இலக்கிய கலை மேம்பாட்டுத்திட்டத்தினை அமைச்சர் விதுர விக்கிரமசிங்க ஆரம்பித்து வைத்தார்.

இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் மேலும் சில நிகழ்வுகளில் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

இத்தாலி நகரமொன்றில் வீடற்றவர்களுக்கு உதவினால் அபராதம்!

wpengine

வசந்தம் தொலைக்காட்சியின் அதிர்வு ஓர் அசிங்கம்!

wpengine

குற்றவாளிகளைக் கண்டறிந்து பூண்டோடு அழித்தொழிக்க முஸ்லிம்கள் துணிந்து களமிறங்கியுள்ளனர்.

wpengine