பிரதான செய்திகள்யாப்புத் திருத்தத்தையும் தாங்கள் பரிசீலிக்கத் தயார் இல்லை மு.கா by wpengineMay 2, 20180126 Share0 சர்வஜன வாக்கெடுப்பிற்கு செல்கின்ற எந்தவொரு அரசியலமைப்பு யாப்புத் திருத்தத்தையும் தாங்கள் பரிசீலிக்கத் தயார் இல்லையென ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. அதிகாரப் பரவலாக்கல் உள்ளிட்ட சகல விடயங்களும் உள்ளடக்கிய திருத்தம் வந்தால் மாத்திரமே அதனை பரிசீலிக்க முடியும் என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நிஸாம் காரியப்பர் குறிப்பிட்டார். இல்லாவிட்டால் அதனை நிராகரிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.