பிரதான செய்திகள்

மோதிக்கொண்ட அமைச்சர்கள்

ஜனாதிபதி தலைமையில் இன்று காலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் கனிய எண்ணெய் வளத்துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவும் இடையில் சூடான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

கொழும்பு சுகததாச விளையாட்டு அரங்கின் செயற்கை ஓடுதளத்தை மீண்டும் புனரமைப்பதற்காக தயாசிறி ஜயசேகர தாக்கல் செய்த அமைச்சரவை பத்திரம் தொடர்பில் அர்ஜூன ரணதுங்க கருத்துக்களை முன்வைக்கும் போது இருவருக்கும் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

கிரிக்கெட் சம்பந்தமாக அமைச்சர்கள் இருவரும் பரஸ்பரம் குற்றச்சாட்டுக்களை சுமத்திக் கொண்டதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலையிட்டு மோதலை முடிவுக்கு கொண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

Related posts

ரணிலை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன்

wpengine

மகளை திருமணம் செய்து! பிள்ளை பெற்றுக்கொள்ளும் தந்தை

wpengine

அரசியலமைப்பை உடனடியாக ரத்து செய்யுமாறு ஜனாதிபதியிடம் கர்தினால் கோரிக்கை

Maash