செய்திகள்பிரதான செய்திகள்

மோடி ஏப்ரல் 4 முதல் 6 வரை இலங்கை விஜயம்! இந்தியா உத்தியோகபூர்வ அறிவிப்பு…

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 4 முதல் 6 வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை பயணிப்பார் என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு அறிக்கையொன்று வௌியிட்டுள்ளது. 

இந்த விஜயத்தின் போது, ​​இந்தியப் பிரதமர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடி இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் ​​அனுராதபுரத்தில் உள்ள ஶ்ரீ மகா போதிக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபடுவார் என்றும், இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நாட்டில் செயல்படுத்தப்படும் பல திட்டங்களைத் தொடங்கி வைப்பார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. 

இந்த விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையே பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவுள்ளன. இந்தியப் பிரதமரின் இந்த விஜயத்தின் போது இந்திய வௌிவிவகார அமைச்சருடன் அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர், இந்திய வௌிவிவகார செயலாளர் மற்றும் இந்திய அரசாங்கத்தின் பல சிரேஷ்ட அதிகாரிகள் பங்கேற்க உள்ளதாக இந்திய வௌிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

வாக்காளர் இடாப்பில் பதிந்துக்கொள்ளுங்கள்

wpengine

ஐந்து நாடுகளின் பெளத்த தேரர்கள் கிளிநொச்சியை வந்தடைந்தனர்..!

Maash

தலைப்பிறையை கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்தல்

wpengine