உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

மோடி உலக பிரபல 10 குற்றவாளிகளின் பட்டியலில்

கூகுள் நிறுவனத்தின் இணையதள தேடுதல் பொறியில் பிரதமர் மோடியின் புகைப்படம் உலகின் மிகப் பிரபல 10 குற்றவாளிகளின் பட்டியலில் இடம் பெற்று இருப்பது கடந்த ஆண்டு தெரிய வந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இதிலிருந்து மோடியின் புகைப்படத்தை அகற்றக் கோரியும் உத்தரபிரதேசத்தை சேர்ந்த சுசில்குமார் என்பவர் கூகுள் நிறுவனத்துக்கு கடிதம் எழுதியதாகவும், அதற்கு அந்த நிறுவனம் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் இதுபற்றி பொலிசில் புகார் செய்தார். ஆனால் பொலிசார் வழக்குப்பதிவு செய்யவில்லை.

இதனால், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அவர் அலகாபாத் ஜூடிசியல் நீதிமன்றில் மனுதாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி ஆனதை தொடர்ந்து சுசில்குமார் அலகாபாத் தலைமை ஜூடிசியல் நீதிபதியை அணுகினார். இதையடுத்து அவருடைய மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இந்த மனு அலகாபாத் கூடுதல் மாவட்ட நீதிபதி மஹ்தாப் அகமது முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் புகார் தொடர்பாக கூகுள் நிறுவனத் தலைவர், அதன் இந்திய தலைமை அதிகாரி ஆகியோர், குற்றவாளிகளின் புகைப்படங்களுடன் மோடியின் படம் இடம் பெற்றது குறித்து விளக்கம் அளிக்கும்படி நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார். மேலும், அடுத்த கட்ட விசாரணையை நீதிபதி அடுத்த மாதம் 31-ந் திகதிக்கு தள்ளிவைத்தார்.

Related posts

மஹிந்தவுக்கு 100 வீத ஆதரவுபொதுச் செயலாளர் தயாசிறி ஜெயசேகர

wpengine

ஜனாதிபதி, அரசியலில் இருந்து ஓரங்கட்டப்பட்டு தனித்து சிறை வைக்கப்பட்டுள்ளார்.

wpengine

கொகேய்ன் விவகாரம்; 3.2 பில்லியன் ரூபா பெறுமதியானது – 07 பேர் கைது

wpengine