செய்திகள்பிரதான செய்திகள்

மொரட்டுவை எகொட பகுதியில் மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்ற இரு மீனவர்கள் மாயம்.

எகொட உயன பகுதியில் மீன்பிடி நடவடிக்கைக்காக கடலுக்குச் சென்று மீள கரைக்குத் திரும்பிய மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர்.

மொரட்டுவை எகொட உயன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகத்துவாரம் மீனவ துறைமுகத்துக்கு அருகில் திங்கட்கிழமை (16) மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்ற இரு மீனவர்கள் மீள கரைக்கு திரும்பியிருந்த நிலையில், கடல் அலை சீற்றம் காரணமாக குறித்த மீனவர்கள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவத்தை அடுத்து மீனவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். 39 மற்றும் 52 வயதுடைய மொரட்டுவை பகுதியை சேர்ந்த இருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடற்படையினரின் உதவியுடன் காணாமல் போனவர்களை மீட்கும் பணி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவருவதாக தெரிவித்த எகொடஉயன பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

தொடர்ந்தும் முஸ்லிம் சமூகம் ஏமாறுவதற்கு தயாரில்லை

wpengine

கரோலின் ஜூரி மற்றும் மாடல் அழகி சூலா பத்மேந்திரா ஆகியோருக்கு பிணை

wpengine

புகையிரத கடவையை மறித்து புத்தளத்தில் ஆர்ப்பாட்டம் (விடியோ)

wpengine