பிரதான செய்திகள்

மொட்டுக்கட்சி தனித்துபோட்டியிடுவது குறித்து மந்திர ஆலோசனை

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்காபொதுஜன முன்னணி தனித்துப் போட்டியிடுவது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டுவருகின்றது.


தனித்துப் போட்டியிடுவதால் வேட்புமனுப் பங்கீடு, தேசியப் பட்டியல் எம்.பி.நியமனப் பகிர்வு உட்பட பல பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும் எனவும்,தேர்தலின் பின்னர் பங்காளிக் கட்சிகள் இணைந்தால் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப்பலத்தையும் பெறலாம் எனவும் கணிக்கப்படுவதாகத் தெரியவருகின்றது.


இதன்படி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மக்கள் ஐக்கிய முன்னணி, தேசிய சுதந்திரமுன்னணி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, புதிய ஹெல உறுமய, இலங்கைத் தொழிலாளர்காங்கிரஸ், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகளைத்தனித்தனியாகப் போட்டியிட வைத்து தேர்தலின் பின்னர் அவர்களை ஸ்ரீலங்கா பொதுஜனமுன்னணியுடன் இணைத்துக் கொள்வது குறித்து ஆலோசிக்கப்படுகின்றது.


நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில் வேட்பாளர்களாகப் போட்டியிடபலர் முன்வந்துள்ளமையும், தேசியப் பட்டியல் நியமனம் பெற பலர் காத்திருக்கும்சூழ்நிலையும் இந்த யோசனைகளுக்கான காரணம் என அறியமுடிகின்றது.

இது குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நிறுவுநர் பஸில் ராஜபக்ச கட்சிமுக்கியஸ்தர்களிடம் மந்திராலோசனைகளை நடத்தி வருகின்றார்.

Related posts

ஞானசார தேரருடன் ஜனாதிபதி சிறையில் சந்திப்பு

wpengine

வடமேல் மாகாணத்திற்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம்

wpengine

வீடுகள் வழங்குவதில் அநீதி இழைக்கப்படுகிறதா? வாருங்கள் கே .கே. மஸ்தான்

wpengine