பிரதான செய்திகள்

மொட்டுக்கட்சி 134 ஆசனங்களை பெறும்! வாக்களிக்கவில்லை என்றால் துன்பங்களை அனுபவிக்க வேண்டும்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் பொதுத்தேர்தலில் 134 ஆசனங்களை கைப்பற்றி அமோக வெற்றியை பெறும் என்பதால், அந்த கட்சியுடன் இணைந்து தமது வேலைகளை செய்து கொள்வதா இல்லை கடந்த காலத்தில் போன்று துன்பங்களை அனுபவிக்க வேண்டுமா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும் என அந்த கட்சியின் தேசிய பட்டியல் வேட்பாளரான சட்டத்தரணி மொஹமட் அலி சப்றி தெரிவித்துள்ளார்.


புள்ளிவிபரங்களுக்கு அமைய பொதுஜன பெரமுனவுக்கு குறைந்தது 134 ஆசனங்கள் கிடைக்கும். அது சில நேரத்தில் 140 ஆகவும் மாறலாம். நாங்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையான 150 ஆசனங்களை பெறவே முயற்சித்து வருகின்றோம்.


நாங்கள் கடந்த முறை கோட்டாபய ராஜபக்சவுக்கு 68 லட்சம் வாக்குகள் கிடைக்கும் எனக் கூறிய போது சிரித்தனர். கணக்கிட்டு பார்க்கும் போது 68 லட்சம் 69 லட்சம் கிடைத்தது.


இதன் பின்னர் எப்படி இதனை அறிந்துக்கொண்டீர்கள் எனக்கேட்டனர். இது சாதாரண அறிவு.புள்ளிவிபரங்கள், மக்களின் இதயத்துடிப்பு, இவற்றை புரிந்துக்கொண்டால் தவறுவதற்கு வாய்ப்பில்லை.


பொதுஜன பெரமுன அமோக வெற்றியை பெறும். அப்படியானால், அரசாங்கத்துடன் இணைந்து தமது வேலைகளை செய்துக்கொள்ள வேண்டுமா, இணைந்து இந்த பயணத்தை செல்வதா, இலங்கையர்கள் என்ற வகையில் அனைவரும் இணைந்து நாட்டின் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கு வலுசேர்ப்பதா, அப்படியில்லை என்றால், கடந்த காலத்தில் போன்று பிரிந்து, துன்பப்படுவதா, ஒன்றாக இணைந்து தற்காத்துகொள்வதா அல்லது பிரிந்து அழிந்து போவதா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் எனவும் அலி சப்றி குறிப்பிட்டுள்ளார்.


கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அலி சப்றி, கோட்டாபய ராஜபக்ச நிச்சயம் வெற்றி பெறுவார் என்பதால், அவருக்கு வாக்களிக்காவிட்டால், முஸ்லிம் மக்கள் வாங்கிக் கட்டிக்கொள்ள நேரிடும் என குறிப்பிட்டிருந்தனர்.

எனினும் பின்னாளில் தான் அவ்வாறு கூறவில்லை என அவர் மறுத்திருந்தார்.

Related posts

உள்ளுராட்சி மன்ற தேர்தல் விரைவில்! புதிய முறைப்படி

wpengine

“முரண்பாட்டு சமன்பாடு” கவிதை தொகுப்பு வெளியீடு

wpengine

களஞ்சியசாலைகளில் உள்ள நெல்லை விடுவிக்க தீர்மானம்: அரிசி இறக்குமதியில் மாற்றமில்லை

wpengine