பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மொட்டுகட்சியின் முதன்மை வேட்பாளர் மஸ்தான்! எஹியாவுக்கு ஆப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின்  வன்னி மாவட்டத்திற்கான முதன்மை வேட்பாளராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதி அமைச்சருமான கெளரவ காதர் மஸ்தான் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.


இன்று (11) கொழும்பில் பிரதமரின் வாசஸ்தலத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி உத்தம கோட்டாபாய ராஜபக்ச அவர்களின் தலைமையில் பிரதமர் கெளரவ மஹிந்த ராஜபக்ச அவர்களின் முன்னிலையில்  காதர் மஸ்தான் அவர்கள்  உரிய பத்திரத்தில் ஒப்பமிட்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் 2020 பாராளுமன்றத் தேர்தலுக்கான வன்னி மாவட்ட  முதன்மை வேட்பாளராக பிரகடனம் செய்யப்பட்டார்.


இந் நிகழ்வில் நாடு முழுவதற்குமாக  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற தேர்தல் 2020 ற்கான  தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளர்கள் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  


ஊடகப்பிரிவு-

Related posts

மக்கள் நடமாட்டத்தையும் ஒன்றுகூடலையும் குறைப்பதற்கு அரசு கவனம் செலுத்தியுள்ளது.

wpengine

அமைச்சர் ரவூப் ஹக்கீம் வட,கிழக்கு இணைப்புக்கு குறுக்காக இல்லை

wpengine

கனேவல்பொல கிராமத்தின் இப்தார் நிகழ்வு

wpengine