பிரதான செய்திகள்

மொட்டு கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மஹிந்த நீங்க வேண்டும்

பொதுஜனபெரமுனவின் தலைவர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்சவை விலக்கிவிட்டு கோத்தபாயவை நியமிக்கவேண்டும் – விமலின் கருத்தினால் ஆளும்கூட்டணிக்குள் குழப்பம்

பொதுஜனபெரமுனவின் தலைவராக ஜனாதிபதியை நியமிக்கவேண்டும் என அமைச்சர் விமல்வீரவன்ச தெரிவித்த கருத்துகாரணமாக அரசாங்கத்திற்குள் கடும் கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது.


பொதுஜனபெரமுனவின் தலைவர் பதவியிலிருந்து பிரதமர் மகிந்த ராஜபக்சவை நீக்கவேண்டும் என விமல்வீரவன்ச ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.


இதன்காரணமாக அரசாங்கத்திற்குள் கடும் கருத்துவேறுபாடு எழுந்துள்ளது .
அமைச்சர் விமல்வீரவன்ச மன்னிப்பு கோரவேண்டும் என பொதுஜனபெரமுனவின் பொதுச் செயலாளர் சாகரகாரியவசம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


கூட்டணி குறித்து கருத்து தெரிவிப்பதற்கோ நடவடிக்கை எடுப்பதற்கோ விமல்வீரவன்சவிற்கு எந்த உரிமையும இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.


விமல்வீரவன்ச தனது கருத்தினை வாபஸ்பெறவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related posts

வேப்பங்குளம்,பாலைக்குழி பாடசாலையின் முன்னால் அதிபர் மரணம்

wpengine

இளவரசர் ஹரியின் திருமண மோதிரத்தின் இரகசியம்

wpengine

பாடசாலைகளை விட்டு விலகிச் செல்லும் மாணவர்களுக்கு தொழிற் பயிற்சி!

Editor