பிரதான செய்திகள்

மைத்திரிபால சிறிசேனவை மீண்டும் ஜனாதிபதியாக்குவோம்! துமிந்த திஸாநாயக்க

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மீளவும் ஜனாதிபதியாக்குவோம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாணந்துறைக் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

2021ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவை களமிறக்கத் திட்டமிட்டுள்ளோம்.இதன் மூலம் மீளவும் மைத்திரிபால சிறிசேன கட்சியின் தலைவராக கடமையாற்றுவார்.

2021ம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச அல்லது சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆகிய இருவருக்கும் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட முடியாது.அதற்கான தகுதி கிடையாது.

எனவே மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும் தாம் ஒரு தடவைதான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ளதாக மைத்திரிபால சிறிசேன தேர்தல் மேடைகளில் வாக்குறுதி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

மன்னார், வெள்ளிமலை பொது விளையாட்டு மைதானத்தில் மாபெரும் இஜ்திமா

wpengine

பாரிஸ் கிளப், இந்தியா மற்றும் சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை நடத்த திட்டம்!-ஜனாதிபதி-

Editor

யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்கள் சங்கத்தால் பிரதமர் மோடிக்கு மகஜர் கையளிப்பு!

Editor