பிரதான செய்திகள்

மேல்மாகாண சபையின் விவசாய, மீன்பிடி அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகளின் வடக்கு விஜயம்

மேல்மாகாண சபையினுடைய விவசாய மற்றும் மீன்பிடி அமைச்சரும், துணை முதல்வரும், மேல்மாகாண சபையின் அவைத்தலைவர், பிரதி அவைத்தலைவர், மேல்மாகாண விவசாய மற்றும் மீன்பிடி அமைச்சின் செயலாளர் மற்றும் மேல்மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர் வட மாகாணத்தின் விவசாயம், கால்நடை அபிவிருத்தி போன்ற விடயங்களை ஆராயும் முகமாக மூன்று நாள் விஜயமொன்றினை மேற்கொண்டு அங்கு வருகை தந்துள்ளனர்.

 இவர்களை வரவேற்கும் நிகழ்வில் வடமாகாண விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சர் க.சிவநேசன், வட மாகாண விவசாய அமைச்சர் செயலாளர், மாகாண கால்நடை அபிவிருத்தி பணிப்பாளர், மாவட்ட பணிப்பாளர்கள், உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.

இந்த வரவேற்பு நிகழ்வானது வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள கால்நடை அபிவிருத்தி திணைக்களத்தில் நேற்றுமுன் தினம் (24.11.2017) பிற்பகல் 3மணியளவில் இடம்பெற்றது.

Related posts

இடம்பெயர்ந்தோரை மீள்குடியேற்றுவது தொடர்பில் வடமாகாண மீள்குடியேற்றச் செயலணி ஆராய்வு

wpengine

சமனலவௌ நீர்த்தேக்கத்தில் இருந்து நீர் வழங்க அமைச்சரவை அனுமதி! 

Editor

மாடுகளை வெட்டக் கூடாது என்பவர்கள் குதிரையை அடித்தே கொல்கிறார்கள்!

wpengine