பிரதான செய்திகள்

மேல் மாகாண பாடசாலைகளுக்கு இரண்டு நாள் விடுமுறை- மேல் மாகாண கல்வி அமைச்சர்

வௌ்ளம் காரணமாக மேல் மாகாணத்திலுள்ள கொலன்னாவ கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் நாளையும் (23) நாளை மறுதினமும் (24) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் கடுவளை கல்வி வலயத்திற்குட்பட்ட புனித மரியாள் கல்லூரி, முனிதாஸ குமாரதுங்க மகா வித்தியாலயம், இஹல போமரிய கனிஷ்ட வித்தியாலயம் ஆகியவற்றுக்கும் நாளையும் நாளை மறுதினமும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண கல்வி அமைச்சர் ரஞ்சித் சோமவங்ச குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கொழும்பு வலயத்திற்குட்பட்ட மட்டக்குளி சென்.ஜோன்ஸ் வித்தியாலயம், பாலத்துறை சங்க போதி வித்தியாலயம், அல் ஹிஜ்ரா முஸ்லிம் வித்தியாலயம், மாளிகாவத்தை தாருசலாம் முஸ்லிம் வித்தியாலயம், ஆகியவற்றுக்கும் நாளை மற்றும் நாளை மறுதினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

களனி கல்வி வலயத்திற்குட்பட்ட மல்வானை மகா வித்தியாலயத்திற்கும் நாளை மற்றும் நாளை மறுதினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதனை தவிர ஹோமாகம கல்வி வலயத்திற்குட்பட்ட மயாதுன்ன மகா வித்தியாலயம், பஹல ஹங்வெல்ல கனிஷ்ட வித்தியாலயம், பஹத்கம ரோமன் கத்தோலிக்க வித்தியாலயம், துன்னானை சுமன போதி வித்தியாலயம், ஆட்டிகல கனிஷ்ட வித்தியாலயம், ஜல்தர கனிஷ்ட வித்தியாலயம், முல்லேகம கனிஷ்ட வித்தியாலயம், படவள கனிஷ்ட வித்தியாலயம், பானலுவ கனிஷ்ட வித்தியாலம் ஆகியவற்றுக்கும் நாளை மற்றும் நாளை மறுதினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

விடுமுறை வழங்கப்பட்டுள்ள பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டிருக்காவிட்டால் அவர்கள் பாடசலைக்கு சமூகமளிக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை பாடசாலைகளில் ஏற்பட்டுள்ள சேதங்களை திருத்துவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண கல்வி அமைச்சர் ரஞ்சித் சோமவங்ச குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஞானசார தேரர் மீது நம்பிக்கை வைத்த தமிழன்! இன்னும் 10நாட்கள்

wpengine

“சமூக ஒற்றுமைக்கு உறுதிபூணுவோம்” மீலாத் வாழ்த்துச் செய்தியில் ஹிஸ்புல்லாஹ்

wpengine

நச்சுத்தன்மையற்ற நாடு! ரத்தன தேரர் -அமைச்சர் சம்பிக்க ரணவக்க முறுகல்

wpengine