அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

மேலும் பல சபைகளில் ஆட்சி அமைத்தது ஐக்கிய மக்கள் சக்தி.

கேகாலை மாவட்டம் மாவனெல்ல பிரதேச சபையின் அதிகாரத்தை ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. புதுல உடகம மாவனெல்ல பிரதேச சபையின் தவிசாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

குருணாகல் மாவட்டம் குளியாப்பிடிய நகர சபையின் அதிகாரமும் ஐக்கிய மக்கள் சக்தி வசமானது. காமினி கருணாரத்ன குளியாபிட்டி நகரசபைத் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

இரத்தினபுரி மாவட்டம் கஹவத்தை பிரதேச சபையிலும் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியமைத்துள்ளது. அதற்கமைய குருகே ஷாந்த பிரியங்கர கஹவத்தை பிரதேச சபை தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

குருணாகல் மாவட்டம் பன்னல பிரதேச சபையின் அதிகாரம் ஐக்கிய மக்கள் சக்தி வசமானது. நந்தசிறி பராக்கிரம பன்னல பிரதேச சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இரத்தினபுரி மாவட்டம் வெலிகெபொல பிரதேச சபையையும் ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. சமிந்த தஸநாயக்க அதன் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கம்பஹா மாவட்டம் வத்தளை மாபோல மாநகர சபையின் அதிகாரம் ஐக்கிய மக்கள் சக்தி வசமானது. விஜய ராஜ பிரகாஷ் இந்த வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார்.

Related posts

பேஸ்புக்கில் திருமண பெண்!

wpengine

தமிழ் கட்சிகள், பொது அமைப்புக்களின் முக்கிய கலந்துரையாடல் நாளை வவுனியாவில்!

Editor

அஸ்வெசும திட்டம் சமுர்த்தியை இல்லாமலாக்கும் வேலைத்திட்டம் அல்ல!-நிதி இராஜாங்க அமைச்சர்-

Editor