பிரதான செய்திகள்

மே தினத்திற்கான விசேட பாதுகாப்பு திட்டம்!

நாளை (01) நடைபெறவுள்ள மே தினக் கூட்டங்களுக்கு பொலிஸார் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளனர்.

கொழும்பு, நுகேகொடை, ஹட்டன் மற்றும் கண்டி ஆகிய நகரங்களில் இந்த பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இதன்படி, மேற்படி பிரதேசங்களில் போக்குவரத்து பாதுகாப்பிற்காக அதிக கவனம் செலுத்தப்பட்டு விசேட வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் நடைபெறும் மே பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்காக 3500 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Related posts

65ஆயிரம் விட்டு திட்டம்! கல் வீடு அமைக்கும் சாத்தியம்

wpengine

உயிர்த்த ஞாயிறு காரணமானவர்கள் எந்த பதவியில் இருந்தாலும் நீதியின் முன் நிறுத்தவேண்டும்.

Maash

எம்.ஏ. சுமந்திரனின் கருத்துக்கள் தமிழ்த் தேசியத்தினை பலவீனப்படுத்துகின்றது : பிரதமர் வி.உருத்திரகுமாரன் !

wpengine