பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. 

குறித்த விபத்து இன்று (04) மதியம் இடம்பெற்றுள்ளது.

இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா நகரில் இருந்து ஹொரவப்பொத்தானை வீதி வழியாக சென்ற கார் ஒன்று ராணி மில் வீதியில் திரும்பிய போது பின்னால் வந்த பாரவூர்த்தி குறித்த காருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்துக்குள்ளான கார் அப் பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றின் முன்னால் நின்ற மோட்டர் சைக்கிளுடன் மோதியுள்ளது. 

அத்துடன் கார் அருகில் இருந்த வர்த்தக நிலையத்திற்குள் புகுந்ததால் வர்த்தக நிலையத்தின் முன் பகுதியும் இடிந்து விழுந்து அதன் கூரைப் பகுதியும் சேதமைடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

 விபத்தில் கார் மற்றும் மோட்டர் சைக்கிள் என்பன சேதமடைந்துள்ளதுடன், விபத்துக்குள்ளான வாகனங்களை வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். 

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை  வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். 

Related posts

‘இரணைமடுக்குள விவகாரத்தில் எந்தவொரு பிரதேச வாதமும் தூண்டப்படவில்லை’ சிவஞானம் சிறீதரன்

Editor

பாரிய நிதி மோசடிகள்! முஸம்மில் விசாரணை

wpengine

பயங்கரவாதத்தின் வரையறையை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென மனித உரிமைகள் ஆணைக்குழு அரசாங்கத்துக்கு அறிவுறுத்தல்!

Editor