பிரதான செய்திகள்

மூன்று மாதத்தில் தேர்தல் நடத்த வேண்டும் அனுரகுமார

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளதால், இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்கு முன்னர் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

எல்லை நிர்ணய நடவடிக்கைகளை நிறைவு செய்ய வேண்டும் மற்றும் புதிய தேர்தல் முறையில் மாற்றம் செய்ய வேண்டும எனக் கூறி அரசாங்கம் தேர்தலை ஒத்திவைத்து வந்தது.

திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளதால், அதற்கான தடைகள் அகன்றுள்ளன. இதனால், தேர்தலை தொடர்ந்தும் ஒத்திவைக்காது அடுத்த மூன்று மாதங்களுக்குள் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காரணங்களை கூறி அரசாங்கம் தேர்தலை ஒத்திவைக்க முயற்சித்தால், அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த நிதி ஒதுக்கீடு!

Maash

இரானுவ நடவடிக்கையின் பின்பு மன்னார் மாவட்டத்தில் புதிய புத்தர் சிலைகள்

wpengine

விமல் கைது! வாகன மோசடி

wpengine