பிரதான செய்திகள்

மூன்று மாத காலத்தில் செயற்திறன் அற்ற அரசு என்பதை அது உறுதி செய்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் சின்னம் எதுவென்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். எனவே, எமது சின்னம் சஜித் பிரேமதாஸவே ஆகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருணா தெரிவித்துள்ளார்


கம்பஹா மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,


சஜித் பிரேமதாஸவை பிரதமராக வெற்றியடையச் செய்தால் ஊழல், மோசடி அற்ற ஆட்சியை முன்னெடுக்க முடியும்.
சஜித்தை பிரதமராக நியமித்து ஊழல், மோசடிகள் அற்ற ஆட்சியை முன்னெடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.


ஜனாதிபதி கோட்டாபய தலைமையிலான அரசு ஆட்சியமைத்து மூன்று மாத காலங்களில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளையோ, புதிய வேலைத்திட்டங்களையோ முன்னெடுக்கவில்லை.
இந்த மூன்று மாத காலத்தில் தாம் செயற்திறன் அற்ற அரசு என்பதை அது உறுதி செய்துள்ளது.


கடந்த அரசு எமது அரசாக இருந்த போதிலும், நாங்கள்தான் ஆட்சி செய்கின்றோம் என்ற உணர்வு எமக்கு ஏற்பட்டிருக்கவில்லை.


அதனாலேயே சஜித்தின் தலைமையின் கீழ் யாருடைய அச்சுறுத்தலும் இன்றி ஆட்சியை முன்னெடுக்க விரும்புகின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.

Related posts

பயங்கரவாதத்திற்கு சாயலான முஸ்லிம் அடிப்படைவாதம்

wpengine

யாழ் உதவி முகாமையாளர் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்

wpengine

ආගමික සමුළුවකට සහභාගී වීමට ඤාණසාර හිමි මියන්මාරයේ සංචාරයක.. විරාතු හිමිත් හමුවෙයි

wpengine