பிரதான செய்திகள்

மூன்று கோரிக்கையினை வைத்துக்கொண்டு ஜனாதிபதி வேட்பாளர் விரைவில்

 

மூன்று விடயங்களை அடிப்படையாக கொண்டே ஜனாதிபதி வேட்பாளர் தெரிவுசெய்யப்படுவார் என திருகோணமலை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் தெரிவித்துள்ளார்.


தோப்பூரில் இன்றையதினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்படும் நபர் மக்களின் பெரும்பான்மை ஆதரவை பெற்றவராகவும் கூட்டணி கட்சிகளால் விரும்பப்படுபவராகவும் சர்வதேச நாடுகளின் ஆதரவை பெற்றவராகவும் இருக்க வேண்டும்.

இந்த மூன்று விடயங்களை அடிப்படையாக கொண்டே ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவுசெய்யப்படுவார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் சஜித் பிரேமதாச, சபாநாயகர் கரு ஜெயசூரிய ஆகியோரில் ஒருவரே ஜனாதிபதி வேட்பாளராக பெயரிடப்படுவர்.

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு உள்ளது.

கிராமப்புறங்களை பொறுத்தவரையில் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் சஜித் பிரேமதாசவையே விரும்புகின்றனர்.

கரு ஜெயசூரியவை பொறுத்தவரை பெரும்பான்மை சிங்கள மக்களால் பெரிதும் மதிக்கப்படும் கறைபடியாத அரசியல் வரலாற்றை கொண்டவர். 52 நாள் அரசியல் குழப்பத்தை முறியடிப்பதில் பெரும் பங்காற்றியவர். சர்வதேசத்தின் நன்மதிப்பு பெற்றவர்.

ஆகவே எல்லா விடயங்களையும் ஆராய்ந்து மூவரில் ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராகவும் மற்றொருவர் பிரதமர் வேட்பாளராகவும் அனைவரின் ஆதரவுடன் விரைவில் அறிவிக்கப்படுவார் என தெரிவித்துள்ளார்.

Related posts

வடக்கில் தமிழ் தரப்பினரின் இனவாத துண்டு பிரசுரங்கள்.

wpengine

4 மாதகாலங்களில் 143 யானைகள் உயிரிழப்பு!

Editor

செட்டிக்குளம் மக்கள் காணியினை விடுவிக்க கோரி ஆர்ப்பாட்டம்!

wpengine