செய்திகள்பிரதான செய்திகள்

மூன்று உயிர்களை எடுத்த பஸ் விபத்து.

பதுளை – துன்ஹிந்த பகுதியில் நேற்று (21) மாலை இரண்டு வளைவுகளுக்கு இடைப்பட்ட பகுதியில் தனியார் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்ததுடன் 26 பேர் காயமடைந்துள்ளனர்.

சுற்றுலாக் குழுவொன்றை ஏற்றிச் சென்ற பேருந்து, துன்ஹிந்த 4 ஆவது மைல்கல் பகுதியில் உள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

காயமடைந்தவர்கள் உடனடியாக பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

இது தொடர்பான பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

இலங்கை அணிக்கு ஹிஸ்புல்லாஹ் வாழ்த்து செய்தி

wpengine

220 கிலோ கேரளா கஞ்சாவுடன் படகு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

Maash

புதிய அமைச்சரவை! தற்போதைய நெருக்கடி நிலைமை மோசமடையும் நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமண வீரசிங்க

wpengine