பிரதான செய்திகள்

மூன்றரை வருடத்தில் மாகாண சபை என்ன செய்தது

வடக்கு மாகாண சபையின் கடந்த மூன்றரை வருட செயற்பாடுகள் தொடர்பாக விவாதிப்பதற்கு அடுத்த மாத இறுதியில் விசேட அமர்வு ஒன்றை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

மாகாண சபையின் 93 ஆவது அமர்வு நேற்று (25) கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் பேரவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானம் தலைமையில் நடைபெற்றது.

இதன்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சபையின் கடந்த மூன்றரை வருட காலச் செயற்பாடுகள் தொடர்பாகவும் ஊடகங்களின் முன்னால் பகிரங்க விவாதம் ஒன்றிற்கு வருமாறும் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா நேற்று முன்தினம் சபையில் தெரிவித்திருந்தார்.

கடந்த மூன்றரை வருடத்தில் மாகாண சபை என்ன செய்தது, என்ன செய்யவில்லை என்பன குறித்து பட்டியலிட வேண்டுமென்றும் அவை தொடர்பாக விவாதம் ஒன்று நடத்தப்பட வேண்டுமென்றும் சபையின் உறுப்பினர்களால் மீளவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சபை செயற்பாடுகள் குறித்து விவாதிப்பதற்கு அடுத்த அமர்விற்குப் பின்னர் அதாவது அடுத்த மாத இறுதியில் விசேட அமர்வு ஒன்று நடத்தப்படும் எனவும் அவைத் தலைவர் அறிவித்துள்ளார்.

 

Related posts

2025 ஆசிய பவர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப்பில் 120 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்ற இலங்கை.

Maash

தேசிய மீலாத் விழாவினை முன்னிட்டு நுவரெலியாவில் வறுமையான 100 குடும்பங்களுக்கு வீடுகள்

wpengine

மனித சுதந்திரத்தையும், நாட்டின் அபிவிருத்தியையும் நிலைநிறுத்த ஒன்றினைவோம்!-எதிர்க்கட்சித் தலைவர்-

Editor