பிரதான செய்திகள்

முஸ்லீம்களின் ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலும், அவர்களுடைய மார்க்கம்

அண்மையில் முஸ்லீம் அரசியல் வாதிகள் போக்கு பற்றி  தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி இஸ்தாபகர்மொஹிடீன் பாவா விடம் வினவியபோது முஸ்லிம் என்ற பெயர் சூடிய அரசியல் கட்சிகள்  சிதைந்து போய்க்கிடக்கின்றன , அது மட்டும் அல்ல துர்நாற்றம் வீசுவதாகவும் காட்சிப்படுத்தி வேற்று இனத்தவர்கள் மத்தியில் நகைப்புக்குஇடமளித்துள்ளது.

 

முஸ்லீம்கள் செய்வது எல்லாம் இஸ்லாம் இல்லை – இஸ்லாத்தில் சொல்லப் பட்டவைகள் அனைத்தையும்முஸ்லீம்கள் பின்பற்றுவதுமில்லை. இது எதார்த்த நிலை, ஆனால் முஸ்லீம்களின் ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலும், அவர்களுடைய மார்க்கம் அடையாளப் படுத்தப்படுவது வேறு எந்த மதத்தை சார்ந்தவர்களுக்கும் இல்லாத ஒரு நிலை. இந்த நிலைக்கு மிகப்பெரும் காரணம் முஸ்லீம்களே. தான் செய்கிற ஒவ்வொரு செயலுக்கும், குறிப்பாக தனது சொந்தவிருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டதாக இருக்கும் பட்சத்தில் மார்க்கத்தை காரணம் காட்டி நியாயப்படுத்த தொடங்கியதன்விளைவுதான் இது. மாற்றார்களுக்கு, குறிப்பாக முஸ்லீம்களையும், இஸ்லாத்தையும் குறை சொல்வதையேவேலையாகக் கொண்டவர்களுக்கு இப்படி மார்க்கத்தை அடையாளப் படுத்துவது இதனால் மிகவும் எளிதாகி விடுகிறது.

இது ஒருபுறம் இருக்க முஸ்லீம்கள் எல்லாம் நம்மை போன்ற மனிதர்கள்தான், ஆனால் அவர்கள் பின்பற்றுகிறமார்க்கம்தான் அவர்களை அப்படியெல்லாம் செய்ய வைக்கிறதென்று இஸ்லாத்தையும் முஸ்லீம்களையும் பிரிக்கின்றவேலையும் மும்முறமாக நடைபெறுகிறது. இது எப்படி இருக்கிறதென்றால், கணக்கில் விடை தவறாக இருப்பதற்க்குகாரணம் பார்முலாவை சரியாக பயன்படுத்தாமல் கணக்குப் பாடத்தையே தவறு என்று சொல்வது போல் இருக்கிறது .

ஒரு முறை மர்ஹும் அஸ்ரப் அவர்கள் மக்கள் மத்தியில் கூறினார் முஸ்லீம் காங்கிரசுக்கு வாக்குப் போடாதவர்கள்காபிர்கள் என்று

இதே போல்தான் சமூகத்தினால் தெரிவு  செய்யப் பட்ட தலைவர்கள் செய்யும் தவறுகள் அச் சமூகத்தை  சாரும், இத்  தவறுகள் மக்களால் தான் தீர்த்து வைக்கப் படவேண்டுமே அன்றி தலைவர்களால் அல்ல  என்பது என் கருத்து

Related posts

இரண்டு கட்சிகளும் நாட்டை முன்னேற்றவில்லை திஸாநாயக்க

wpengine

கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் தொழில் முயற்சி வழிகாட்டல்

wpengine

அக்கரைப்பற்றில் மீண்டும் கனமழை (படங்கள்)

wpengine