உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

முஸ்லிம்கள் மீதான மனித உரிமை மீறல்கள்! மாளிகையில் ஆர்ப்பாட்டம்

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானில் குடியேறிய முஸ்லிம்கள் மீது மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதாக வெள்ளை மாளிகை மற்றும் பாகிஸ்தான் தூதரகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்கு பின்னர் இந்தியர்கள் பாகிஸ்தானுக்கு இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் முஹாஜிர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

பாகிஸ்தானின் கராச்சி பகுதியில் வசித்து வரும் இவர்கள், பல ஆண்டுகளாக பாகிஸ்தான் அரசால் புறக்கணிக்கப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்படுகின்றது.

இந்நிலையில், அமெரிக்காவில் வசிக்கும் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானில் குடியமர்ந்த முஸ்லிம் மக்களின் உறவினர், வெள்ளை மாளிகை மற்றும் வாஷிங்டன் நகரில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்னர் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

இந்தியாவில் இருந்து குடிபெயர்ந்தவர்கள் மீது மனித உரிமை மீறல்கள் நடத்தப்படுவதாகவும், தாங்கள் இன்றும் இந்தியர்களாகவே அடையாளப்படுத்தப்படுவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

Related posts

தண்ணீர் எடுக்க சென்ற 15வயது மாணவி மரணம்

wpengine

ரவி பதவி விலக வேண்டும்! ரஞ்சன் ராமநாயக்க

wpengine

காத்தான்குடி பிரதான வீதியில் ஏற்படும் விபத்தை தடுக்க அடுத்த கட்ட நகர்வு

wpengine