பிரதான செய்திகள்

முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்று சொல்லுவோர்! உலகம் இருட்டி விட்டதாக நினைப்பு

முஸ்லிம் தீவிரவாதிகள் என்ற சொல்லை அடிக்கடி பயன்படுத்தி தனது கடந்தகாலத்தை மறந்து தன்னை நல்லவர் போல காட்ட முனைவது உண்மையில் பூனை கண்களை மூடிக்கொண்டு உலகம் இருட்டி விட்டதாக நினைப்பது போன்றே உள்ளது என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் காரைதீவு முஸ்லிம் பிரதேச அமைப்பாளருமான ஏ.எம். ஜாஹீர் தெரிவித்துள்ளார்.
காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கி.ஜெயசிறில் தலைமையில் அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திபொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

காரைதீவை சுற்றி மூன்று முஸ்லிம் ஊர்கள் இருக்கிறது அதனால் எங்களுக்கு பயமாக இருக்கிறது. எங்களது மக்கள் அச்சத்துடன் வாழ்வதாக கூறியிருக்கும்.
அவர் இரண்டு நாட்கள் மட்டுமே நடந்த சம்பவங்களை பற்றி பேசுவதுடன் கடந்த 30 வருடங்களாக நாட்டில் நடந்தவை தெரியாமல் கோமாவில் இருந்திருப்பதை எண்ணி நான் கவலைப்படுகிறேன்.

கடற்கரை வீதியால் போதைப்பொருள் கடத்தல் இடம்பெறுவதாகவும் அந்த வீதியில் இருக்கும் உப பொலிஸ் நிலையம் மற்றும் கடல் படை தளம் என்பன கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் அவர் தெரிவித்திருப்பது அவரின் முட்டாள் தனத்தின் உச்சமே.
போதைப்பொருள் நடமாட்டம் இருப்பதை அறிந்திருந்த காரைதீவு பிரதேசத்தின் ஆட்சியாளராக இருக்கும் தவிசாளர் காரைதீவு கிராம சேவக எல்லைகளில் அமையப்பெற்றிக்கும் அந்த காவல் அரங்களுக்கு ஏன் அவர் அறிவிக்கவில்லை? அந்த போதைவஸ்து முகவர்களுடன் அவருக்கு ஏதாவது தொடர்பு இருக்கிறதா? என சந்தேகிக்க முடிகிறது.

சில காட்டுமிராண்டி மிருகங்கள் முஸ்லிம் பிரதேசத்தில் இருந்துகொண்டு நாட்டை சீரழிக்க திட்டம் இட்டபோது இந்த நாட்டின் பாதுகாப்பு கருதி பாதுகாப்பு தரப்புக்கு அவர்கள் பற்றிய தகவல்களை வழங்கியது அப்பிரதேசத்தில் வசிக்கும் முஸ்லிம் பொதுமக்களே என்பதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து நிதிகொடுத்து நாட்டை சின்னாபின்னமாக்கும் எந்த ஒரு செயலையும் முஸ்லிங்கள் இதுவரை செய்ததாக வரலாறுகள் இல்லை இனியும் நடக்காது என்பதை இப்படியான இனவாத கருத்தாளர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
இந்த நாட்டின் பாதுகாப்பு படைக்கு நிகரான நாட்டு பற்று மிக்க முஸ்லிங்கள் வாழும் மூன்று கிராமங்கள் காரைதீவை சுற்றி இருப்பது காரைதீவு மக்களுக்கு பாதுகாப்பு என்பதை தவிசாளர் அறிந்து கொள்ள வேண்டும்.

தியாக உணர்வு கொண்ட இலங்கை பாதுகாப்பு படையை குறைகூறிக்கொண்டு சகோதரத்துவத்துடன் வாழும் முஸ்லிம், தமிழ் மக்களின் உறவை சீரழித்து இனவாத, மதவாத சாயம் பூசி அரசியல் இலாபம் அடைய அவர்கள் போடும் திட்டம் இந்த பிரதேச எந்த மத மக்களிடமும் பலிக்காது என்பதுதான் உண்மை.

இந்த நாட்டின் அரசியல், பொருளாதாரம், ஒற்றுமை, இறைமைகள் அழிக்கப்பட காரணமாக அமைந்தவர்களின் முகவர் போன்று இயங்கிவரும் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் முஸ்லிம் சமூகத்தின் மீது சேறுபூசும் விதமாக விரல் நீட்ட அணுவளவும் தகுதி இல்லாதவரே.

கடந்த காலங்களில் தமது சொத்துக்களை பறித்துவிட்டு 500 ரூபாயுடன் லட்சக்கணக்கான முஸ்லிங்களை வடக்கிலிருந்து வெளியேற்றியதை மறந்து விட்டீர்களா? இல்லை காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுதுகொண்டிருந்த முஸ்லிம் அப்பாவிகளை கொன்று குவித்தவர்கள் யார் என்பதை மறந்து விட்டீர்களா ?
அருந்தலாவையில் மத போதகர்களை கொன்று குவித்த அவர்கள்தான் சாய்ந்தமருது சந்தையில் குண்டை வெடிக்க செய்தார்கள் என்பது காலம் சொல்லும் இரத்த வரலாறுகள்.

இவற்றையெல்லாம் செய்தவர்களை நீங்கள் தியாகி பட்டம் கொடுத்து பேசிவிட்டு சிறிய ஒரு அமைப்பு செய்த ஈன செயலுக்கு ஒட்டுமொத்த முஸ்லிங்களையும் தீவிரவாதி போன்று பேசுகிறீர்கள்.

Related posts

உங்களிடமிருந்து விடைபெற நான் விரும்பவில்லை

wpengine

பிரதமர் பதவியை எவரும் குழிதோண்டிப் பறிக்க முயலமாட்டார்கள்.

wpengine

இலங்கையில் 6.2மில்லியன் பேஸ்புக் பாவனையாளர்கள்! புதிய முறை

wpengine