பிரதான செய்திகள்

முஸ்லிம்களை ஏமாற்றும் முஸ்லிம் அரசியல் வாதிகள்

(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,சம்மாந்துறை)

எமது முஸ்லிம் சமூகத்துக்கு கிடைத்த சாபம் எமது அரசியல் பிரதிநிதிகள் தான்.அவர்களை நாம் தான் தெரிவு செய்தோம்.

இன்று ஒன்று கூடிய முஸ்லிம் அரசியல் வாதிக்கள் எடுத்த முடிவு என்ன? ஜனாதிபதியையும் பிரதமரையும் சந்தித்து இது குறித்து பேசுதல் என்பதாகும்.

இதற்கு முன்பும் பல தடவைகள் இவர்கள் ஜனாதிபதியையும்,பிரதமரையும் சந்தித்து பேச்சு நடாத்தியுள்ளனர்.கிட்டிய இலாபம் என்ன? மீண்டும் மீண்டும் சந்தித்தால் இலாபம் கிட்டி விடுமோ?

இலங்கை முஸ்லிம்களுக்கு நடக்கும் அநீதிகள் அவர்களுக்கு தெரியும்.இது இன்று கூடிய அரசியல் வாதிகளாலேயே பல தடவைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.அதனை கட்டுப் படுத்த தவறுகிறார்கள் என்றால் அதனை ஆதரிக்கின்றார்கள் என்பதே பொருளாகும்.

இவ் இனவாதத்தை இலங்கை அரசு உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும்.இவர் இத்தனை நாட்களுக்குள் கைது செய்யப்படாது போனால் நாங்கள் சுயாதீனமாக செயற்படுவோம்.இவைகள் தான் உறுதியான தீர்மானம்.அப்படி எந்த முடிவும் இன்று எடுக்கப்படவில்லை.

கடந்த டிசெம்பர் மாதமளவில் எமது அரசியல் வாதிகள் ஜனாதிபதியை சந்தித்திருந்தனர்.அப்போது ஜனாதிபதியின் பேச்சு அவ்வளவு சிறந்த தீர்வை வழங்கவில்லை.இதனை அறிந்தும் வெட்கம் கெட்ட எமது அரசியல் வாதிகளுக்கு அவரை எதிர்த்து செயற்பட முடியவில்லை.

அது போன்று தான் மீண்டும் மீண்டும் செயற்பட போகின்றார்களா? இன்று கூடிய அரசியல் வாதிகள் முதலில் ஜனாதியுடன் கதைக்க செல்ல முன்பு ஒரு உறுதியான தீர்மானத்தை எடுக்க வேண்டும்.அப்படி இல்லாது போனால் இவர்கள் ஜனாதிபதியை சந்திப்பதும் ஒன்று தான் சந்திக்காமல் இருப்பதும் ஒன்று தான்.

இன்று கூடிய அரசியல் வாதிகள் ஜனாதியை சந்திப்போமென முடிவு எடுத்தார்களே ஒழிய அவர் சரியான தீர்வை தராது போனால் என்ன செய்வது என்ற தீர்மானத்தை எடுக்க முடியவில்லை.இதுவே அவர்களின் பதவி வெறி.

 

Related posts

இறக்காமத்தில் இரத்த தான முகாம்

wpengine

கயிற்றைப் போட்டு கழுத்தில் சுருக்கிட்டு தனது பெண் தோழிக்கு நேரலை காணொளி அழைப்பை எடுத்து மிரட்டிய ஆண்

wpengine

கருச்­சி­தைவு சட்­ட­பூர்­வ­மாக அனு­ம­திக்­கப்­பட வேண்­டுமா? இல்­லையா?

wpengine