பிரதான செய்திகள்

முஸ்லிம்களுக்கு சொந்தமான படகுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் இனந்தெரியாத நபர்களால் படகுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
புல்மோட்டை ஜின்னா புரம் கடற்கரையில் இந்த அனர்த்தம் சற்று முன்னர் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கடலுக்கு கொண்டு செல்லும் மீன்பிடி படகுகள் 3 மற்றும் 40 குதிரைவலு கொண்ட இரண்டு இயந்திரகள் முற்றாக தீ மூட்டி எரிக்கப்பட்டுள்ளன.

அண்மையில் புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட படகுகளே இவ்வாறு தீ வைத்து நாசம் செய்யப்பட்டுள்ளன.

நாட்டில் தற்போது பல்வேறு பகுதிகளில் வன்முறைகள் சம்பவங்கள் இடம்பெற்று வரும் நிலையில், இந்த அனர்த்தம் மக்களை பெரும் அச்சப்பட வைத்துள்ளதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

முல்லைத்தீவில் மின்னல் தாக்கம்! சகோதரன் பழி சகோதரி படுகாயம்

wpengine

மஹிந்தவின் வெளிநாட்டு பயணத்தின் இரகசியம் அம்பலம்

wpengine

இலவச உம்றா திட்டம் 2ஆம் குழு நாளை பயணம்! அமைச்சர் ஹலீம், ஹிஸ்புல்லாஹ் வழியனுப்பி வைப்பு

wpengine