பிரதான செய்திகள்

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டங்களில் திருத்தம்

இஸ்லாமிய திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டங்களில் திருத்தங்களை செய்வது குறித்து ஆராய அமைச்சரவை உப குழுவை நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ச முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

முஸ்லிம் சட்டத்தின் கீழ் திருமணம் செய்ய உகந்த வயது எல்லை மற்றும் அந்த சட்டத்தின் கீழ் வரும் விடயங்கள் சம்பந்தமான ஏற்பாடுகள், இலங்கையும் அங்கம் வகிக்கும் சில சர்வதேச இணக்கங்களுக்கு இசைவாக இல்லை என்பதால், அவற்றில் திருத்தங்களை செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

நியமிக்கப்படவுள்ள அமைச்சரவை உப குழு இதனை ஆராய்ந்த பின்னர் திருத்த யோசனைகளை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளது.

Related posts

சவுதி அரேபியா பெண்களுக்கு அடுத்த அனுமதியினை வழங்கிய மன்னர்

wpengine

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலம்! டிரம்ப் நிர்வாகம் அறிவிப்பு

wpengine

அரசாங்கம் நாடகங்களை அரங்கேற்றி வருகின்றது! அதில் கருணா,உலகக்கிண்ணம் என பல

wpengine