பிரதான செய்திகள்

முஸ்லிம் பெண்களின் அபாயாவுக்கு எதிராகவும்,இந்து ஆசிரியர்களுக்கு ஆதரவாகம் அய்யூப் அஸ்மீன் பதிவு

சிறீ சண்முகா இந்துக் கல்லூரி விவகாரத்தில்; முஸ்லிம் மக்கள் தமது ஹிஜாபிற்கான உரிமை கோருவதில் எவ்வித நியாயங்களும் இருப்பதாக அறியமுடியவில்லை.

இந்துக் கோவில் ஒன்றினுள் முஸ்லிம் மக்கள் தமது வணக்கங்களை மேற்கொள்ள விரும்பமாட்டார்கள், அதற்கு முயற்சிக்கவோ அனுமதிக்கவோ மாட்டார்கள். அதைப்போன்ற ஒன்றாகவே இதுவும் எனக்குத் தோன்றுகின்றது.

அங்கு முஸ்லிம் ஆசிரியர்கள் கற்பிப்பதற்கும் எவ்வித அவசியமுமில்லை. அதை இந்து மக்களுக்கான பாடசாலையாகப் பேணுவதிலேயே நல்லிணக்கமும் அமைதியும் ஏற்படும் என்று நம்புகின்றேன்.

பல்லின சமூகங்கள் வாழும் எமது நாட்டிலே தமது தனித்துவத்தை ஒரு இனம் பேணுவதற்கு விரும்பும்போது, அதனால் ஏனையவர்களுக்குப் பாதிப்புகள் இல்லை என்ற நிலையில் அவர்களது கோரிக்கையை அனுசரித்துப் போவதே சிறப்பானது.

திருமலையில் முஸ்லிம்களுக்கான பாடசாலைகள் இருக்கின்றன அவற்றிலே முஸ்லிம்கள் பணியாற்றுவதற்கும், கல்வி கற்பதற்கும் முழுமையான உரித்தும், வாய்ப்பும் இருக்கின்றது. இதனை முஸ்லிம் மக்கள் புரிந்துகொள்தல் அவசியம்.

ஹிஜாப் உரிமை குறித்து இவ்விடத்தில் பேசுவதில் எவருக்கும் எந்தப் பயனும் ஏற்பட்டுவிடமாட்டாது.

Related posts

லண்டன் தாக்குதல்: அறுவர் பலி, இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை

wpengine

வவுனியா, கல்வியற்கல்லூரியில் அமைதிக் கல்வித்திட்டம்

wpengine

சாய்ந்தமருது பிரதேச சபை! இரு கட்சி தலைவர்களினால் மக்கள் வீதி செல்லும் நிலை

wpengine