பிரதான செய்திகள்

முஸ்லிம் திணைக்களம் நடாத்தியதேசிய மீலாதின் பரிசளிப்பு விழா – 2021

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தேசிய ரீதியாக நடாத்திய  மீலாத் போட்டிகளின் பரிசளிப்பு விழா நாளை (26) ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் கபூர் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.


முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இப்றாஹிம் அன்சாரின் தலைமையில் நடைபெறவுள்ள இப்பரிசளிப்பு விழாவில், உவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம் முஸம்மில் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளார்.

இந்நிகழ்வில், விஷேட அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களான மர்ஜான் பளீல், காதர் மஸ்தான் மற்றும் புத்த சாசன மத விவகார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன ஆகியோர் கலந்து கொள்வர். 


இலங்கை ஹஜ் கமிட்டியின் தலைவர் அஹ்கம் உவைஸ், பிரதமரின் முஸ்லிம் விவகாரத்துக்கான ஒருங்கிணைப்புச் செயலாளர் பர்ஸான் மன்சூர் மற்றும் பிரதமரின் முஸ்லிம் விவகாரத்துக்கான ஒருங்கிணைப்பாளர்அஷ்ஷைய்ஹ் அஸ்ஸைய்யித் ஹஸன் மௌலானா ஆகியோர் விஷேட அதிதிகளாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.


இதற்கான  ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின்  நிகழ்ச்சிகளுக்கான ஒருங்கிணைப்பாளர் அஷ்ஷேய்ஹ் எம்.எம்.எம்.முப்தி தெரிவித்தார்.


இந்நிகழ்வில், உலமாக்கள், பிரமுகர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

குடும்பத் தகவல் திரட்டுப் படிவம் பொலிஸ் கோரிக்கை

wpengine

‘தவறான போதனைகளுடனான பாடசாலைப் புத்தகங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்’

Editor

பராமரிக்க பணமில்லாததால் “மக நெகும” திட்ட நிறுவனங்கள் கலைக்கப்படும்!-பந்துல-

Editor