பிரதான செய்திகள்

முஸ்லிம் ஜனாஷா வீட்டிற்கு சென்ற மஹிந்த

பேருவளை சீனன்கோட்டை மாணிக்க வர்த்தகர் அல்ஹாஜ் முர்ஸி பளீல் காலமானார்.


அன்னார் மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் மர்ஹூம் எம்.எஸ்.எம் பளீல் ஹாஜியாரின் புதல்வரும் முன்னாள் பேருவளை நகர சபை தலைவர் மர்ஜான் பளீலின் சகோதரரும் முன்னாள் பேருவளை நகர பிதா மில்பர் கபூரின் மாமனாருமாவார்.

அன்னாரின் ஜனாஸா இன்று 03.02.2019 காலை 9.00 மணிக்கு சீனன்கோட்டை பாஸிய்யா ஜும்ஆப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஜனாஸா நல்லடக்கத்தில் உலமாக்கள்,முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர்களான குமார வெல்கம, ரோஹித அபேகுணவர்தன, பியல் நிசாந்தத, விதுர விக்ரம நாயக்க உட்பட மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட பெருந்திரளான பொதுமக்களும் கலந்துகொண்ட னர்.

Related posts

நான் மகப்பேற்று விடுமுறையில்! ஊடகங்கள் என்னை விட்டுவிடுங்கள் ஹிருனிகா

wpengine

வாகன எரிபொருள் திறன் தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்களை மறுத்தது லங்கா IOC

Editor

மஹிந்தவுக்கு 100 வீத ஆதரவுபொதுச் செயலாளர் தயாசிறி ஜெயசேகர

wpengine