பிரதான செய்திகள்

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அமைச்சர் றிஷாட்டின் அணியுடன் இணைவு

(ஏ.எம் .றிசாத்) 
கல்பிட்டி பிரதேச சபையில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதான வேற்பாளராக களம் இறங்க இருந்த கடையாமோட்டை வட்டாரத்தை சேர்ந்த மொஹமட் பைசல் இன்று அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்துகொண்டார்.

இவர் எதிர்வரும் உள்ளுராட்சி சபை தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக கல்பிட்டி பிரதேச சபை தேர்தலில் போட்டியிட உள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த நிகழ்வில் புத்தள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நவவி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கல்பிட்டி அமைப்பாளர் எகியா ஆப்தீன் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

Related posts

மாகாண சபை தேர்தலுக்கு! மூன்று பேர் போட்டி புதிய யோசனை

wpengine

சமஷ்டி என்ற பேச்சுக்கே தயாரில்லை! அமைச்சர் மஹிந்த சமரசிங்க

wpengine

மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட சமுர்த்தி பயனாளிகள்

wpengine