பிரதான செய்திகள்

முஸ்லிம் காங்கிரஸை கட்டிக் காத்த கர்மவீரர்களுக்கு சிறப்பு கௌரவம்

கட்சியின் மூத்த போராளிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு மகுடம் சூட்டலும், 2014/2015, 2015/2016 ஆண்டுகளில் பல்கலைகழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கௌரவிப்பும் நேற்று (2016.03.12} மிக விமர்சியாக சம்மாந்துறை அல் மர்ஜான் மகளீர் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் 19 வது தேசிய மாநாட்டை முன்னிட்டு நடைபெறும் நிகழ்வுகளில் ஒரு அங்கமாக மறைந்த பெருந்தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்கள் பிறந்த சம்மாந்துறையில் “மரத்திற்கு மகுடம் மண்ணிற்கு மகிமை” என்ற தலைப்பில் முப்பெரும் விழாவாக இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.10365721_1593138337638707_8537409149575347569_n

“மரத்திற்கு மகுடம் மண்ணிற்கு மகிமை” முப்பெரும் விழா நிகழ்வானது அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், சம்மாந்துறை அமைப்பாளருமான எம்.ஐ.எம்.மன்சூர் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.

நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசியத் தலைவருமான அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து “மரத்திற்கு மகுடம் மண்ணிற்கு மகிமை” நிகழ்வை சிறப்பித்ததுடன் 199 மூத்த போராளிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு அவர்களின் பெயர் பொறிக்கப்பட்ட நினைவுச் சின்னங்களும், 87 பல்கலைகழக மாணவர்களுக்கும் பெறுமதி வாய்ந்த பரிசுப் பொதிகளும் வழங்கி கௌரவித்தார்.10533267_1593138347638706_7781741659219942788_n 12814728_1593138254305382_2242388980761084835_n

இணைந்த வடகிழக்கு மாகாண சபையின் உறுப்பினரான மர்ஹூம் எம்.வை.எம்.மன்சூர் அவர்களுக்கே இன்றைய மூத்த போராளிக்கான முதல் கௌரவம் அளிக்கப்பட்டமை விசேட அம்சமாகும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் போராளிக்கான முதலாவது அங்கத்துவ இலக்கமும் கட்சியின் ஆரம்ப காலத்தில் இவருக்கே வழங்கி வைக்கப்பட்டமை வரலாறாகும்.

இதனைத் தொடர்ந்து தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் அவர்களுக்கும், எம்.எம்.சஹுபீர், ஏ.எம்.தபீக், எம்.எஸ்.அமீர் அலி உட்பட 199 போராளிகளும் தொடர்ச்சியாக கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் தேசிய தலைவரின் சகோதரர் ரவூப் ஹசீர் தலைமையில் கவியரங்கும் இடம்பெற்றதுடன் வில்லுப்பாட்டு, கிராமியப் பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகளும் சிறப்பாக மேடையேற்றப்பட்டு இருந்தது.

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர், மாகாண சபை உறுப்பினர்கள் ஆரிப் சம்சுதீன், மாஹிர் உட்பட கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் , போராளிகள் மற்றும் ஆதரவாளர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
“மூத்த போராளி”

Related posts

ஜனாதிபதி ஆணைக்குழுவில் 24 ஆம் திகதிக்கு பிறகு முறைப்பாடு செய்ய முடியாது.

wpengine

ராஜபக்சவின் கடைசி மகனான ரோஹித ராஜபக்ச! மஹிந்தவின் மகன் செயலாளராக நியமனம்

wpengine

முடியாவிட்டால் எஸ்.பி. திஸாநாயக்க அரசியலை விட்டு வெளியேற வேண்டும் முன்னால் அமைச்சர் கோரிக்கை

wpengine