பிரதான செய்திகள்

முஸ்லிம் ஆன்மீகத் தலைவர் தைக்கா அஹமத் நஸீம் அவர்கள் பிரதமருடன் சந்தித்தார்.

தென்னிந்திய முஸ்லிம் ஆன்மீகத் தலைவர் அஷ் ஷெயிக் கலாநிதி தைக்கா அஹமத் நஸீர் அலீம் அவர்கள் –

நேற்று முற்பகல் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களை, அலரி மாளிகையில் சந்தித்தார்.

அவர், காலஞ்சென்ற இந்திய முஸ்லிம் ஆன்மீகத் தலைவரான அஷ் ஷெயிக் கலாநிதி தைக்கா சுஹாய்ப் அலீம் அவர்களின் புதல்வராவார்.

மத நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கு மேற்கொள்ளக்கூடிய பணிகள் குறித்து இந்தச் சந்திப்பின் போது கலாநிதி தைக்கா அஹமத் நஸீர் அலீம் அவர்கள் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

கலாநிதி தைக்கா அஹமத் நஸீர் அலீம் அவர்கள், எமது நாட்டின் மஹாசங்கத்தினர் மற்றும் இஸ்லாம் மத குருமார்கள் ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.

மேற்படி சந்திப்பின் போது, கலாநிதி அக்ரஹெர கஸ்ஸப தேரர் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.

கலாநிதி தைக்கா அஹமத் நஸீர் அலீம் அவர்களுடன் வருகைத்தந்திருந்த முஸ்லிம் மதத் தலைவர்களும் பிரதமருடனான சந்திப்பில் கலந்து கொண்டனர்.

Related posts

மோடியினை சந்தித்த கூட்டமைப்பு! பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுடன் விரிவாகக் கதைத்துள்ளேன் மோடி

wpengine

முஸ்லிம்களை ஏனையவர்களுடன் மோதவிட சமூக வலைத்தளங்கள் முயற்சி -அமைச்சர் றிஷாட்

wpengine

அபிவிருத்திகள் கைகூடி வருகின்ற போது அரசியல் தேவைகளுக்காக தடைபோட கூடாது அமைச்சர் றிஷாட்

wpengine