பிரதான செய்திகள்

முஸ்லிம் அர­சி­யலில் தனிப்­பட்ட ‘கிசு­கிசு’ பற்றி நான் அறிவேன்! – பசீர் ஷேகு­தாவூத்

(எம்.எஸ்.எம்.நூர்தீன்)

எந்­த­வொரு அர­சியல் தலை­வ­ரி­னதும் எவ்­வித இர­க­சி­யங்­களின் தட­யங்­களும் என் வச­மில்லை என்­பதை பகி­ரங்­க­மாகத் தெரி­வித்துக் கொள்­கிறேன் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரசின் தவி­சா­ளரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான பசீர் ஷேகு­தாவூத் விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­வித்­துள்ளார்.
நேற்று வியா­ழக்­கி­ழமை அவர் ஊட­கங்­க­ளுக்கு விடுத்­துள்ள அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

எனது கடந்த கால அர­சியல் வாழ்வில் பல தனிப்­பட்ட நிகழ்­வு­களின் இர­க­சி­யங்கள் புதைந்து கிடப்­ப­தா­கவும், நான் பிர­நி­தித்­துவ அர­சி­ய­லி­ருந்து வில­கிய பின் புலத்தில் அவை வெளி­வரும் வாய்ப்­புள்­ள­தா­கவும் சமூக வலைத்­த­ளங்­க­ளிலும் வேறு சில ஊடக கட்­டு­ரை­க­ளிலும் எழு­தப்­பட்டு வரு­கின்­றன.

தற்­போது மட்­டு­மல்ல கடந்த சில கால­மா­கவே முஸ்லிம் அர­சி­யலில் தனிப்­பட்ட கிசு­கிசு பற்றி நான் அறிவேன் என்றும் அவை விரைவில் வெளி­வ­ரக்­கூடும் என்றும் அர­சியல் பரப்பில் பரப்­பு­ரைகள் செய்­யப்­பட்டு வரு­கின்­றன.

மேலும் சில அர­சி­யல்­வா­தி­களால் இதே கருத்­துகள் தெரி­விக்­கப்­பட்டு வரு­வ­தையும் அவ­தா­னிக்க முடி­கி­றது.

தனித்­திரு, பசித்­திரு, விழித்­திரு எனப்­ப­டு­கின்ற நோன்பின் இஸ்­லா­மிய உப­வாசத் தத்­துவம் பேசப்­ப­டு­கின்ற இக்­கால கட்­டத்தில்,கடந்த 27ஆம் திகதி காத்­தான்­கு­டியில் இடம்­பெற்ற இப்தார் நிகழ்­வொன்றில் தலைவர் ரவூப் ஹக்கீம் உரை­யாற்­று­கையில் “தனது தலை­மையை பணயக் கைதி­யாக வைத்து இனிமேல் அர­சியல் செய்ய இட­ம­ளிக்கப் போவ­து­மில்லை, பதவி நோக்­கத்­திலே யாரும் இந்தக் கட்­சியை அட­கு­வைத்து பிழைப்­ப­தற்கு இனி­மேலும் நாங்கள் இடம் கொடுக்­க­வும்­மாட்­டோம்”­என்ற ஆரோக்­கி­ய­மான கருத்தைத் தெரி­வித்­துள்ளார்.

தலை­மை­யையும் கட்­சி­யையும் அவர் அகப்­பட்டுக் கொண்ட எவ்­வி­த­மான விட­யங்­களில், எந்தத் தரு­ணங்­களில்,எவ­ரெவர் பணயக் கைதி­யாக வைத்­தி­ருந்­தனர் என்­ப­தையும் அவ­ரது 16 வருட தலை­மைத்­துவக் காலத்துள் இவ்­வா­றான பணய நாட­கங்கள் எவ்­வ­ளவு காலம் நீடித்­தது என்­ப­தையும் மக்கள் புரி­யும்­படி தெளி­வாக வெளிக்­கொ­ணர்­வது தலை­வரின் கட­மை­யாகும்.

இனி மேலும் இவ்­வா­றான விட­யத்­திற்கு  இட­மில்லை என்று அவர் கூறி­யி­ருப்­ப­தா­னது இதற்கு முன் நிச்­ச­ய­மாக நடந்த விட­யங்­க­ளுடன் துல்­லி­ய­மாக உடன்­படும் கருத்­தே­யாகும்.

இவ்­வி­டயம் பற்றி தலைமை முழு­மை­யாகப் பகி­ரங்­கப்­ப­டுத்தும் போது கடந்த 16 வரு­டங்­க­ளாக அவ­ரது தலைமை நிமிர்ந்து நின்று நிலைத்த வர­லாற்­றையா அல்­லது சர­ண­டைந்து சரிந்த வர­லாற்­றையா வெளிப்­ப­டுத்­து­கி­றது என்­பது மக்­க­ளுக்குத் தெளி­வாகும். ஆகையால் இவ்­வி­வ­ரணம் கட்­சியைத் தூய்­மைப்­ப­டுத்தும் பணியில் ஒருமைல் கல்­லாக அமையும்.

இதே வேளை எந்­த­வொரு அர­சியல் தலை­வ­ரி­னதும் கண்­ணுக்குப் புலப்­ப­டாத தனிப்­பட்­ட­வாழ்க்கை தொடர்பில் எவ்­வித இர­க­சி­யங்­களின் தட­யங்­களும் என் வச­மில்லை என்­பதை பகி­ரங்­க­மாகத் தெரி­வித்துக் கொள்­கிறேன். கடந்த காலங்­களின் அந்­த­ரங்­கங்­களை வெளிப்­ப­டுத்­து­வ­தாகக் கூறி மிரட்டல் விடுத்து எனது அர­சி­யலைச் செய்து வரு­கிறேன் என்று ஒரு­சாரார் குடு­கு­டுப்பைப் பிரச்­சாரம் செய்து வரு­கின்­றனர்.

தனிப்­பட்ட அர­சி­யல்­வா­தி­களின் சப­லங்கள் முஸ்லிம் அடை­யாள அர­சி­யலைப் பலி கொண்டு விடக்­கூ­டாது என்­பதில் கடந்த பதி­னைந்து வரு­டங்­க­ளாக மிக்க கரி­ச­னை­யுடன் இயங்கி வந்­துள்ளேன்.

அஷ்­ரஃபின் காலம் தொடங்கி தனி அர­சியல் தலை­வர்­களை அழித்து விட்டால் முஸ்லிம் தேசிய இனத்­துவ அர­சி­யலை அழிக்க முடியும் என்று நம்பி அர­சி­யல்­வா­தி­களில் சிலர் செயல் பட்­டு­வந்­தனர்.

இந்த நம்­பிக்கை வெற்றி பெறு­வ­தற்கு வாய்ப்பு உள்­ளது என்­பதை நான் ஊகித்து அறிந்த கார­ணத்­தினால் இக்­கோட்­பாட்­டுக்கு எதி­ராக 2000 ஆம் ஆண்­டு­களின் நடுப்­ப­கு­தியில் தீவி­ர­மாகச் செயற்­பட்­டி­ருந்தேன். எனது அந்தக் கால கட்ட அர்ப்­ப­ணிப்பு என்­பது 2005ஆம் ஆண்­டி­லி­ருந்து இன்று வரை­யுள்ள 11 ஆண்­டு­க­ளாக முஸ்லிம் காங்­கி­ரஸை வீழ்ந்து விடாது வைத்­தி­ருக்கும் கார­ணி­களில் ஒன்­றாகும்.

மற்றும், அடுத்­த­வரின் அந்­த­ரங்­கங்­களை மூல­த­ன­மாக்கி சொந்த அர­சி­யலை கட்­ட­மைக்கும் மூன்­றாந்­தரச் செயலை எனது வர­லாற்றில் என்­றுமே நான் செய்­த­தில்லை.

முஸ்­லிம்­களின் தனித்­துவ அர­சி­யலில் தனி நபரைக் காப்­பாற்­று­வதன் மூலம்தான் கட்­சி­யையும் காப்­பாற்ற முடியும் என்ற ஒரு கால கட்­டத்தைக் கடந்து தனி நபர்­க­ளி­ட­மி­ருந்து கட்­சியைக் காப்­பாற்­றி­யாக வேண்டும் என்­கிற நிலை இன்று தோன்­றி­யுள்­ளது.

இருந்த போதிலும் தனி­யொரு அர­சியல் தலை­வரின் நன்­ன­டத்­தையைக் கேள்­விக்­குட்­ப­டுத்தி அவரை சமு­தா­யத்தின் முன் தலை குனியச் செய்­து­விட்டால் அவர் தலைமை தாங்கும் சமூ­கத்தின் அர­சி­யலை வீழ்ச்­சி­ய­டையச் செய்ய முடியும் என்ற நம்­பிக்­கைக்கு எதி­ராகத் தீவி­ர­மாகச்  செயற்­பட்ட நான், இன்று எத­ன­டிப்­ப­டையில் ஒரு தலை­மையின் தனிப்­பட்ட வாழ்வின் பல­வீ­னங்­களைப் பற்றி பறை­சாற்ற முடியும்?

தலைவர் அஷ்­ரஃ­புக்குப் பிந்­திய சவால் மிகுந்த முஸ்லிம் தேசிய  இனத்­துவ அர­சி­யலில் முஸ்லிம் காங்­கி­ரஸைத் தக்­க­வைப்­பதில் என்னால் முடிந்த பங்­க­ளிப்பைச் செய்­துள்ளேன். பிர­தி­நி­தித்­துவ அர­சி­ய­லி­லி­ருந்து விடுப்­பட்­டுள்ள இன்­றைய சூழலில் இந்தத் திருப்தி எனக்குப் போது­மா­ன­தாகும்.

எனது பொது வாழ்வில் நிகழ்ந்­தே­றிய ஆவ­ணப்­ப­டுத்தத் தகுதி பெற்ற அர­சியல் வர­லாற்றுத் தட­யங்­களைத் தவிர ஏனைய அனைத்து கசப்­பான சம்­ப­வங்­க­ளையும் எனது நினை­வுக்­கி­டங்­கி­லி­ருந்து அப்­பு­றப்­ப­டுத்தி நீண்ட கால­மா­கி­விட்­டது. பொய்­மை­களை உண்­மை­களால் வெல்ல முடியும் என்ற நம்­பிக்­கை­யுள்ள ஒருவர் அந்­த­ரங்க விட­யங்­களைப் பாவித்து அர­சியல் செய்ய மாட்டார் என்­பதை புரிந்­து­கொள்­ளு­மாறு இவ்­வி­டத்தில் வேண்டி நிற்­கிறேன்.

சமூக விடு­தலை என்­பது சாக­சங்­க­ளி­னாலோ,வெற்றுக் கோசங்­க­ளி­னாலோ அன்றி சாது­ரி­யங்­க­ளி­னாலும், தியாகங்களினாலும் மாத்திரமே சாத்தியமாகும் என்பதை பிரதிநிதித்துவ அரசியல் செய்யும் தலைவர்கள் கருத்திலே கொள்வது அவசியமாகும்.

இறுதியாக முஸ்லிம் மக்களின் தனித்துவ அரசியலைக் காப்பாற்றுவதற்கு நெருக்கடிகள் மிகுந்த அன்றைய கால கட்டத்தில் பெரும் பங்களிப்பை நல்கிய இலத்திரனியல், அச்சு ஊடகங்களை இத்தருணத்தில் நன்றியுடன் நினைவு கூருகின்ற அதேவேளை கட்சியைத் தூய்மைப்படுத்தும் எனது போராட்டத்தை மழுங்கடிக்கும் பிரச்சாரங்களை பொருட்படுத்தாது இப்போராட்டத்தில் மக்கள் கைகோர்த்து நிற்கவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கிறேன் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மாகாணசபை, உள்ளூராட்சி சபைத் தேர்தல்களையும் தாமதமின்றி நடத்த வேண்டும்

wpengine

இன்று முதல் மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களின் அனுமதிப்பத்திரம் பறிமுதல்

wpengine

வவுனியா இலுப்பையடி தினச்சந்தையில் மோசடி மக்கள் விசனம்

wpengine