பிரதான செய்திகள்

முஸ்­லிம்­களை அடக்கி ஆள­மு­டி­யாது! எம்.கே. சிவா­ஜி­லிங்கம்

எங்­க­ளை­விட எண்­ணிக்­கையில் குறை­வா­க­வுள்ள முஸ்­லிம்­களை அடக்கி ஆள­மு­டி­யாது.அவர்­களை சரி­ச­ம­மாக நடத்­தா­விட்டால் சரி­யான தீர்வை எங்­களால் எட்ட முடி­யாது என்­பதை           திட்­ட­வட்­ட­மாக நாங்கள் ஏற்றுக் கொள்­கின்றோம் என முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.கே. சிவா­ஜி­லிங்கம் தெரி­வித்தார்.

வடக்கு, கிழக்கு இணைப்பு குறித்து அவர் விடுத்­துள்ள அறிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­யுள்ளார்.

அவ் அறிக்­கையில் மேலும் கூறப்­பட்­டுள்­ள­தா­வது,

வட­கி­ழக்கு என்­பது தமிழ்­பேசும் மக்­க­ளு­டைய தாய­க­ பூமி. அதில் தமிழ், முஸ்லிம், சிங்­கள மக்கள் இருப்­பார்கள். அவர்கள் தொடர்­பான நலன்கள் பேணி பாது­காக்­கப்­பட்டு சரி­ச­ம­மாக நடத்­தப்­பட வேண்டும்.

முஸ்­லிம்­க­ளுக்­கென்று சிறப்­பான பல விட­யங்கள் இருக்­கின்­றன என கோரிக்கை விடுக்­கின்­றனர். அவர்கள் பெரும்­பான்­மை­யாக இருக்­கக்­கூ­டிய பகு­தி­க­ளில் ஒரு நல்­லாட்­சி­யுள்ள சுயாட்­சி­யுள்ள முஸ்லிம் பிராந்­திய சபை­யொன்று கிடைப்­ப­தற்­கான யோச­னையை முன் வைத்­துள்ளோம். உல­கில் இவ்­வா­றான பல தீர்­வுகள் உள்­ளன. அவர்கள் விரும்­பக்­கூ­டிய யோச­னையில் நாங்கள் தலை­யிட முடி­யாது. ஆகக்­கூ­டிய சுயாட்­சியை வழங்கி அனை­வ­ரு­டைய பங்­க­ளிப்­புடன் அந்த மக்கள் எதிர்­கா­லத்தில் தாங்கள் ஒதுக்­கப்­ப­டு­கின்றோம் என நினைக்­கா­த­வாறு இதே­வேளை ஒரு சட்­டத்தை கொண்டு வரு­கின்ற பொழுது மூன்றில் இரண்டு பெரும்­பான்மை மக்­க­ளு­டைய சம்­ம­த­மின்றி தமிழ் மாநிலத்தில் அவர்கள் முஸ்­லிம்கள் தொடர்­பான சட்டத்தை நிறை­வேற்ற முடி­யாது என்ற சரத்து நிறை­வேற்றப்பட வேண்டும். சிங்­கள மக்­க­ளிடம் எவ்­வாறு சம ­உ­ரி­மையைக் கோரு­கின்­றோமோ அவ்­வாறு எங்­க­ளை­விட எண்­ணிக்­கையில் குறை­வா­க­வுள்ள முஸ்­லிம்­களை அடக்கி ஆள­மு­டி­யாது. அவர்­களை சரி­ச­ம­மாக நடத்­தா­விட்டால் சரி­யான தீர்வை எங்­களால் எட்ட முடி­யாது என்­பதை திட்­ட­வட்­ட­மாக நாங்கள் ஏற்றுக் கொள்­கின்றோம்.

முஸ்­லிம்­க­ளு­டைய பூரண சம்­ம­தத்­து­டன்தான் வட­கி­ழக்கு இணைந்த ஒரு தமிழ் மாநிலம் அமை­ய ­மு­டியும் எனத் தெரிந்து வைத்­தி­ருக்­கின்றோம்.எதிர்­கா­லத்­தில் ஒரு துளி அள­வேனும் முஸ்­லிம்கள் பாதிக்­கப்­ப­டாத வகையில் ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட வேண்டும். இலங்­கைக்குள் தமிழ் மக்­க­ளுக்­கான ஒரு அர­சியல் தீர்வு யோச­னையை சிங்­கள, பௌத்த பேரி­ன­வாதம் ஒரு போதும் தரப் போவ­தில்லை. ஆனால் ஏன் முயற்சி செய்­யக்­கூ­டாது என வெ­ளி­நாட்­ட­வர்­கள் எம்­மிடம் கேட்­கின்­றார்கள். முயற்சி செய்­கின்றோம். அது நிரா­க­ரிக்­கப்­ப­டு­மாக இருந்தால் சர்­வ­தே­சத்தின் ஒத்­து­ழைப்பை நாடு வோம். இந்­திய – இலங்கை உடன்­ப­டிக்­கையில் இப்­போ­தி­ருக்­கின்ற அரை­கு­றை ­தீர்­வான மாகா­ண சபை­யொன்று கிடைக்கப் பெற்றது.

எனவே சர்வதேச ரீதியாக இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகி­ய­வற்­றின் பங்களிப்புடன்தான் ஒரு அரசியல் தீர்வு கிடைக்குமென உறுதியாக நம்புகின்றோம். எமது அரசியல் தீர்வு யோசனையில் இந்நாடுகள் அனுசரணையாளர்களாக இருக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளோம் என கூறப்பட்­டுள்­ளது.

Related posts

அக்கரைப்பற்று மக்களின் பிரச்சினைக்கு ஹக்கீம் அமைச்சர் தீர்வு கொடுப்பாரா?

wpengine

13ம் திருத்தம், தேர்தல் முறை இவற்றில் கைவைக்க ஒருபோதும் இணங்க மாட்டோம்

wpengine

செப்டெம்பரில் இலங்கை வங்குரோத்திலிருந்து மீளும்! -ஜனாதிபதி-

Editor