பிரதான செய்திகள்

முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சிக்கின்ற அரியநேத்திரன்! மிகப்பெரிய கொள்ளை புலிகளால் வட மாகாண முஸ்லிம்களின் சொத்துகள் கொள்ளையிடப்பட்டது தான்.

(சபூர் ஆதம்)

வடமாகாண முஸ்லிம்களை புலிகள் இனச்சுத்திகரிப்பு செய்யவில்லை என நீங்கள் அறிக்கை விட்ட செய்தியினை பத்திரிகையில் படிக்கக் கிடைத்தது.

ஏன் ஐயா முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சிக்கின்றீர்கள்? இலங்கை வரலாற்றில் நடை பெற்ற மிகப்பெரிய கொள்ளை புலிகளால் வட மாகாண முஸ்லிம்களின் சொத்துகள் கொள்ளையிடப்பட்டதுதான் , இந்த கொள்ளை உலக வரலாற்றில் மிக பெரிய கொள்ளை சம்பவங்களில் ஒன்று என்றும் முஸ்லிம்களிடம் கொள்ளை இட்ட பல கோடி டாலர்
சொத்துகளை புலிகள் தமது சர்வதேச வியாபாரத்தில் முதலீடு செய்திருந்த விடயம் சம்மந்தமாக நீங்கள் அறிந்திருந்தும் அறியாதவர் போல் நடிகின்றீர்களா?

தூங்குபவர்களை எழுப்ப முடியும், தூங்குவது போல நடிப்பவர்களை எழுப்ப முடியாது என்பதுபோல் உள்ளது உங்கள் நிலை. வடமாகாணத்தின் யாழப்பாணம் முல்லைதீவு வவுனியா
மன்னார் கிழிநொச்சி ஆகிய ஐந்து மாவட்டங்களிலிருந்தும் தமிழ்மக்களுடன் பல நூற்றாண்டு
காலமாக சகோதர வாஞ்சையுடன் வாழ்ந்து வந்த சும்மார் ஒரு இலச்சத்துக்கும் அதிகமான முஸ்லீம்கள் அவர்களின் பாரம்பரிய பிரதேசங்களிலிருந்து புலிகளால் விரட்டியடிக்கப்பட்டார்கள்.

இம் முஸ்லீம் மக்கள் இவர்களுடன் ஒத்துழைக்கவில்லை என்பதற்காகவும் சாவகச்சேரி
முஸ்லீம் ஒருவரிடம் ஆயுதம் இருந்ததாகவும் பொய் வதந்திகளைப் பரப்பி அப்பாவி தமிழ் மக்களை நம்பவைத்து அத்துடன் இனக்குரோதத்தை உருவாக்கி அவர்கள் முன்னிலையிலேயே குழந்தை பிள்ளைகளின் பால் மாவு முதற்கொண்டு முஸ்லீம்களின் சகல உடமைகளும் பட்டப்பகலில் 2மணி நேர அவகாசத்தில் ஈவிரக்கமின்றி ஆயுத முனையில்
அபகரிக்கப்பட்டும், விரட்டியடிக்கப்பட்டதை உங்களால் எப்படி மறுக்க முடிகின்றது!?

இந்த நடவடிக்கைக்கு முன்னர் வடக்கில் இஸ்லாமிய துடிப்புள்ள பல வாலிபர்கள் புலிகளால் கடத்தபட்டனர் யாழ்ப்பாணத்திலும் மன்னாரிலும் பல முஸ்லிம் வாலிபர்கள் சுட்டு கொல்லப்பட்டார்கள் , கடத்தப்பட்டு கானாமல் போனார்கள் இதன் பின்னர் 1990 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22ஆம்திகதி வட புல முஸ்லிம்கள் . உடமைகள் எல்லாம் அபகரிகப்பட்டு தமது தாய் மண்ணை விட்டு வெறும்கையோடு விரட்டப்பட்டனர்.

யாழ்பாண முஸ்லீம் மக்களுக்கு வெறும் இரண்டு மணித்தியால அவகாசமே வழங்கப்பட்டது. ஏனைய மாவட்ட முஸ்லீம்களுக்கு ஒரு நாள் தொடக்கம் 48மணித்தியால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. யாழ்பாண முஸ்லீம் மக்களை விரட்டி வெளியேற்றும் நோக்கோடு 35 முஸ்லீம் வர்தகர்களை புலிப்பயங்கரவாதிகள் கடத்திசென்றனர். இவர்களில் புலிகளுக்கு இலச்சக்கணக்கில் கப்பம் வழங்கிய 18 முஸ்லீம் வர்தகர்கள் சிலமாதங்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

ஏனையோர் சித்திரவதை செய்து கொல்லபட்டனர் சித்திரவதை செய்து கொல்லபட்டவர்களில் “கெளுறு” என்ற பிரபல வர்தகர் மிக வயதானவர் இவர் தலை கீழாக கட்டப்பட்டு சித்திரவதை செய்து, ஏணையோர் பற்றிய தகவல்கள் கொல்லபட்டனர் என்பதை தவிர வேறு எதுவும் இன்றுவரை கிடைக்கப் பெறவில்லை.

வடமாகாண அன்றைய மொத்த சனத்தொகையில் ஐந்து சதவீதமாக இருந்த முஸ்லீம்
மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டிருந்தார்கள். இவர்களில் பெரும்பாலானோருக்கு தமிழைத்தவிர வேறு எந்த மொழியும் தெரியாது. விரட்டப்பட்டமை ஓர் அப்பட்டமான இனச்சுத்திகரிப்பாகும். வடமாகாண முஸ்லிம்களின் சொத்துகளின் விபரங்கள் 1990 ஆம் ஆண்டு IDMC- Sri Lanka IDP Figures Analysis நிறுவனத்தினால் கணக்கிடப்பட்டவை பின்வருமாறு,

இன்று இருபத்தாறு ஆண்டுகள் கடந்து விட்டன, பல மடங்குகளால் பெருக்கி பார்க்க வேண்டும்.

# மன்னார்- 6,425 வீடுகள், 1990 கணிப்பீடு ரூபா. 995,343,425.00
# யாழ்பாணம் – 1,391 வீடுகள், 1990 கணிப்பீடு ரூபா. 497,859,750.00
# வவுனியா- 2,106 வீடுகள், 1990 கணிப்பீடு ரூபா. 223,533,292.00
# முல்லைதீவு – 552 வீடுகள், 1990 கணிப்பீடு ரூபா. 150,360,850.00
# கிளிநொச்சி -236 வீடுகள் , 1990 கணிப்பீடு ரூபா. 52,180,500.00

வடமாகாண மொத்தம் 11,110 வீடுகள் , 1990 கணிப்பீடு ரூபா. 1,919,277,817.00

வயல் காணிகள்
# மன்னார்- 6,600 ஏக்கர்கள்
# வவுனியா- 1,936 ஏக்கர்கள்
# யாழ்பாணம் – 1256 ஏக்கர்கள்
# முல்லைதீவு- 994 ஏக்கர்கள்
# கிளிநொச்சி- 272 ஏக்கர்கள்

 

வயல் நிலங்கள் மொத்தம் – 11,058-ஏக்கர்கள் இதர சொத்துக்கள் – தங்கம் மற்றும் மின்பாவனைப் பொருட்கள்.
# மன்னார்- 7,507 பொருட்கள், 1990 கணிப்பீடு ரூபா. 1,481,722,445.00
# யாழ்பாணம் – 2,430 பொருட்கள், 1990 கணிப்பீடு ரூபா. 694,607,633.00
# வவுனியா- 2369 பொருட்கள், 1990 கணிப்பீடு ரூபா. 360,288,100.00
# முல்லைதீவு- 1,060 பொருட்கள், 1990 கணிப்பீடு ரூபா. 233,888,148.00
# கிழிநொச்சி – 316 பொருட்கள், 1990 கணிப்பீடு ரூபா. 68,171,335.00

மொத்தம் 13,682 பொருட்கள், 1990 கணிப்பீடு ரூபா. 360,288,100.00

ஒருபாரிய கொடுரத்துக்கு வடக்கு வாழ் முஸ்லீம் மக்கள் முகம்கொடுத்து இருபத்தாறு வருடங்கள்
ஓடிவிட்டன. வடக்கை விட்டு விரட்டப்பட்ட முஸ்லீம் மக்கள் இன்னமும் பல பாரிய அகதி முகாம்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். மன்னாரிலிருந்து விரட்டப்பட்டு புத்தளம் அகதி முகாமில் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லீம் அகதிகளின் அவலங்கள்
சொல்லமுடியாதவைகள் ஐயா.

வடக்கில் இருந்து விரட்டப்பட்ட முஸ்லீகளில் எண்பது சதவீதமானவர்கள் இன்னமும் தமது தாய் மண்ணுக்கு திரும்பவில்லை என்பது பற்றி தெரியுமா ஐயா?

Related posts

வஸீம் தாஜுதீன் படுகொலை! ஜனாதிபதி செயலக தொலைபேசி அம்பாந்தோட்டை கால்டன் இல்லத்துடன் தொடர்பு உறுதியானது.

wpengine

இந்தியா தடுப்பூசி போட்டவர்களுக்கு காச்சல்

wpengine

அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தபடவில்லை

wpengine