பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை, நாளை திறந்து வைக்கவிருந்த நிலையில் துணைவேந்தருக்கு திடீர் மாரடைப்பு!

யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ். சிறீ சற்குணராசா திடீர் மாரடைப்பினால் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்களால் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவுத்தூபியை, நாளை வௌ்ளிக்கிழமை   துணைவேந்தர் திறந்து வைக்கவிருந்த  நிலையில், இன்றைய தினம் அவர் மாரடைப்பினால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி பல்கலைக்கழக நிர்வாகத்தினால் கடந்த ஜனவரி 8ஆம் திகதி இடித்து அழிக்கப்பட்டது.

எனினும், அதனைக் கண்டித்து எழுந்த மக்கள் எழுச்சியாலும் மாணவர்களின் போராட்டங்களினாலும் இருந்த இடத்திலேயே முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைக்க பல்கலைக்கழக நிர்வாகம் இணக்கம் தெரிவித்தது. அதனை அடுத்து பல்கலைக்கழக துணைவேந்தரினால் அடிக்கல்லும் நட்டுவைக்கப்பட்டது.

“முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்” எனக் குறிப்பிடப்பட்ட பதாகை காட்சிப்படுத்தப்பட்டு, நினைவுத் தூபியை மீள அமைக்கும் பணிகள் மாணவர்களின் பங்களிப்புடன் ஜனவரி 15ஆம் திகதி ஆரம்பமானது குறிப்பிடத்தக்கது.

Related posts

அரச ஊழியர் சம்பள அதிகரிப்பு…

Maash

எந்த காலத்திலும் இணையத்தளங்கள் தடைசெய்யப்பட மாட்டாது!- ஜனாதிபதி

wpengine

உயர் நீதிமன்றின் பரிந்துரை ஜனநாயகத்தின் வெளிப்பாடு -ஹிஸ்புல்லாஹ்

wpengine