பிரதான செய்திகள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் சமுர்த்தி பயனாளிகள் தெரிவின் மீளாய்வு

முல்லைத்தீவு மாவட்டத்தில் வறுமைகோட்டின் கீழ் உள்ள குடும்பங்களுக்காக அரசாங்கத்தால் வழங்கப்படும் சமுர்த்தி நிவாரண கொடுப்பனவு இதுவரை மீள்குடியேற்றப்பட்ட 23 கிராமங்களுக்கு கிடைக்காத நிலையில், அதனை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையில் சமுர்த்தி திணைக்களம் ஈடுபட்டுள்ளது.
அதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் சமுர்த்தி பயனாளிகளை தெரிவின் மீளாய்வு நடவடிக்கைகள் அண்மையில் இடம்பெற்றுள்ளன.

இதன்போது சமுர்த்தி கிடைக்காத புதிய பயனாளிகள் பலர் உள்வாங்கப்பட்டுள்ளார்கள் எனவும் தகவல் கிடைத்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை 11024 குடும்பங்களுக்கே சமுர்த்திக் கொடுப்பனவு கிடைத்து வருகின்றது.

இந்நிலையில் 14713 குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரணம் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையில் சமுர்த்தி திணைக்களம் ஈடுபட்டுள்ளது.

இதற்கான புள்ளிவிவரங்களையும் கோரிக்கைகளையும் சமுர்த்தி திணைக்களத்திடம் கோரியுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

Related posts

ஆசாத் சாலிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் விரைவில்

wpengine

பொது குழாய் கிணற்றை ஆக்கிரமித்த வவுனியா வர்த்தகர்

wpengine

உள்ளுராட்சி எல்லை நிர்ணயம் தெல்தோட்டைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

wpengine