பிரதான செய்திகள்

முல்லைத்தீவு, மாஞ்சோலை வைத்தியரினால் ஒருவர் மரணம்

முல்லைத்தீவு – மாஞ்சோலை வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற சென்ற நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக இன்றைய தினம் சிகிச்சை பெற சென்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரியவருகின்றது.

முள்ளியவளை நிராவிப்பிட்டியை சேர்ந்த செ.நவரெட்ணம் என்ற 64 வயதுடையவே மாரடைப்பு காரணமாக பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த நபரை வைத்தியர் பரிசோதித்து மருந்து குறிப்புகள் சிலவற்றை எழுதிக்கொடுத்துள்ளார்.

இந்நிலையில் மருந்துகளை பெறுவதற்காக வைத்தியசாலையில் காத்திருந்த நிலையிலே குறித்த நபர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.

Related posts

வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

Editor

மருதமுனை தீக்கிரையான வீட்டினை பார்வையிட்ட தாஹிர் MP..!

Maash

20வது அரசியலமைப்புத் திருத்தம்! நீதி மன்ற தீர்ப்பு சபாநாயகரிடம்

wpengine